Published:Updated:

4 நாள்களில் 4-வது சம்பவம்... தொடர்ந்து தீக்கிரையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! - அச்சத்தில் மக்கள்

தீக்கிரையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

4-வது நாளாக வடசென்னையில் உள்ள குடியிருப்பு பகுதியான மஞ்சம்பாக்கத்தில் உள்ள மாத்தூர் சுங்கச்சாவடி அருகே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது.

4 நாள்களில் 4-வது சம்பவம்... தொடர்ந்து தீக்கிரையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! - அச்சத்தில் மக்கள்

4-வது நாளாக வடசென்னையில் உள்ள குடியிருப்பு பகுதியான மஞ்சம்பாக்கத்தில் உள்ள மாத்தூர் சுங்கச்சாவடி அருகே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது.

Published:Updated:
தீக்கிரையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக ஓலா மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் தீ பிடித்து எரிந்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேலூரில் ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில், தந்தையும் மகளும் பலியானார்கள்.

அதைத் தொடர்ந்து, புனேவில், சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த ஓலா ஸ்கூட்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் அந்தப்பகுதியே பரபரப்பானது. ஆனால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அதேபோல, மூன்றாவது நாளாக திருச்சியில், கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து பரபரப்பை அதிகப்படுத்தியது.

ஓலா ஸ்கூட்டர்
ஓலா ஸ்கூட்டர்

இந்த நிலையில், தற்போது 4-வது நாளாக வடசென்னையில் உள்ள குடியிருப்பு பகுதியான மஞ்சம்பாக்கத்தில் உள்ள மாத்தூர் சுங்கச்சாவடி அருகே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தொடர் சம்பவங்களால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``வாகனங்கள் ஏன் தீப்பற்றி எரிந்தன என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்ததும் இனிவரும் நாள்களில் இது மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா நிறுவனம் தனது பேட்டரி செல்களை தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்வதாகவும், இந்தச் சம்பவங்களால் இனி அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஓலா நிறுவன அதிகாரிகள் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.