Published:Updated:

`நள்ளிரவில் திடீரெனப் பற்றியெரிந்த கடைகள்!' - கோத்தகிரி மார்க்கெட் அதிர்ச்சி

கோத்தகிரி மார்க்கெட் தீ விபத்து
கோத்தகிரி மார்க்கெட் தீ விபத்து

கோத்தகிரி மார்க்கெட்டில், நள்ளிரவில் திடீரெனப் பற்றி எரிந்த தீயில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்கெட் கடைகளை வழக்கம்போல் அடைத்துவிட்டு வியாபாரிகள் சென்றுள்ளனர். நள்ளிரவில், தீடீரென கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. அந்தச் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள், இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தீயணைப்புப் பணி
தீயணைப்புப் பணி

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், தீ மளமளவென அருகில் இருந்த கடைக்கும் பரவியது. இதை அறிந்த வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கூடினர்.

`உன்னை ஒரு போட்டோகூட எடுக்காம இருந்துட்டேனே!' - கும்பகோணம் தீவிபத்து நினைவு நாளில் கதறிய தாய்

தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்தச் சம்பவத்தில் 10-க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசமாயின.

ராஜேஷ்
ராஜேஷ்

இந்தச் சம்பவம்குறித்து வியாபாரி ராஜேஷ் கூறுகையில், ``நள்ளிரவு ஏற்பட்ட தீயால் 9 பழக்கடைகள், ஒரு காய்கறிக் கடை, ஒரு மளிகைக் கடை என 11 கடைகள் எரிந்துவிட்டன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும். பாதிப்புக்குள்ளானவர்கள் குறு வணிகர்கள் என்பதால், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து காவல்துறையினர்,``தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை. விசாரணை மேற்கொண்டுவருகிறோம். உண்மைக் காரணம் கண்டறியப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு