Published:Updated:

குமரி: டீக்கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம் - நிவாரண உதவி அறிவித்த முதல்வர்!

காஸ் சிலிண்டர் வெடித்த டீக்கடை

டீ குடிக்கச் சென்றிருந்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேருக்கும், காஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

குமரி: டீக்கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம் - நிவாரண உதவி அறிவித்த முதல்வர்!

டீ குடிக்கச் சென்றிருந்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேருக்கும், காஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

Published:Updated:
காஸ் சிலிண்டர் வெடித்த டீக்கடை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததில் டீக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. சபீக் (37) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த டீக்கடையை நடத்திவந்தார். இரவு முழுவதும் செயல்படும் இந்த டீக்கடையில் நேற்று அதிகாலையில் டீ வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, கடையிலுள்ள சமையல் காஸ் சிலிண்டர் திடீரென தீப் பற்றி எரிந்திருக்கிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட டீ மாஸ்டர் உட்பட கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர்.

ஆனால் திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கிறது. அங்கு டீ குடிக்கச் சென்றிருந்த இரண்டு பெண்கள் உட்பட 7 பேருக்கும், சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்துக்கும், நாகர்கோவில் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

சேதமடைந்த டீக்கடை
சேதமடைந்த டீக்கடை

தீக்காயம் அடைந்த எட்டுப் பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் 20 நிமிடங்களுக்கு மேலாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்ததாகவும். தீயை அணைக்காமல் டீக்கடை இயங்கிவந்ததாகவும், அதிக வெப்பம் காரணமாக சிலண்டர் வெடித்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வடசேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

இந்த நிலையில் சிலிண்டர் வெடி விபத்தில் காயமடைந்த தேநீர்க் கடையில் வேலை பார்த்துவந்த மூசா (48), பிரவீன் (25), சேகர் (52), டீ குடிக்கச் சென்ற சுப்பையன் (66), சுதா (43), சந்திரன் (62), சுசீலா உட்பட எட்டுப் பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினர்.