Published:Updated:

`சென்னை ஃபர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து' - கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் நாசம்!

முழுக்க முழுக்க ப்ளைவுட்டுகள், வீட்டுப்பயன்பாட்டு மரச்சாமான்கள் என எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களாக இருந்ததால் அவையனைத்தும் பெருமளவு எரிந்து, அந்தப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

கிட்டங்கியில் தீ விபத்து
கிட்டங்கியில் தீ விபத்து

சென்னை செங்குன்றம் அருகே காவாங்கரையில் உள்ள ப்ளைவுட் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கிட்டங்கியில் தீ விபத்து
கிட்டங்கியில் தீ விபத்து

செங்குன்றம் காவாங்கரை, கெமிக்கல் ஸ்டோரேஜ் குடோனிலிருந்த கெமிக்கல் பேரல் ஒன்று வெடித்ததால், அந்த குடோன் தீப்பற்றியிருக்கிறது. சிறிது நேரத்திலேயே கெமிக்கல் குடோன் முழுவதும் எரிந்ததோடு, அருகிலிருந்த ஃபர்னிச்சர்ஸ் சேமிப்பு குடோனிற்கும் தீ மளமளவெனப் பரவியது. அதில் முழுக்க முழுக்க ப்ளைவுட்டுகள், வீட்டுப்பயன்பாட்டு மரச்சாமான்கள் என எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களாக இருந்தன. அதனால், அனைத்துப் பொருள்களும் பெருமளவு எரிந்து, அந்தப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

`திடீர் ஓசை; 20 அடி உயரத்துக்குத்  தீ ஜுவாலை!' - கோவிலூரைப் பதறவைத்த மின்வாரிய விபத்து

தகவல் அறிந்ததும் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி எந்திரங்களின் உதவியோடு தீயணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டதால், தீ கட்டுக்குள் வந்தது. அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களிலும் மேலும் தீ பரவாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிட்டங்கியில் தீ விபத்து
கிட்டங்கியில் தீ விபத்து
vikatan

சென்னை செங்குன்றம் அருகே ஃபர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து! #Chennai

Posted by Vikatan EMagazine on Sunday, December 15, 2019

இந்தத் தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ப்ளைவுட்டுகள், மரச்சாமான்கள் எரிந்து சாம்பலாகின. விடியற்காலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட குடோன் சுவர்கள் பலவீனமாக, எந்நேரமும் இடிந்துவிழக்கூடிய நிலையில் இருப்பதால், அதன்மூலம் விபத்து ஏற்படாதிருக்க, முன்கூட்டியே அந்தச் சுவர்கள் இடித்துத்தள்ளப்படும் என்று தெரிகிறது.