Published:Updated:

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ; தரைமட்டமான கட்டடம்! - தொழிலாளியைப் பலிகொண்ட விபத்து

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

விருதுநகரில் ஃபேன்ஸி ரகப் பட்டாசு தயாரிப்பின்போது ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஸிவிருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த ஆலைகளில் உள் தொழிலாளர்களாக மூன்று லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் உற்பத்தியில் ஐந்து லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத் தேவையை இப்பகுதிகளிலுள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்திசெய்கின்றன.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

பட்டாசு உற்பத்தி பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், ஆலைகளில் எதிர்பாராமல் ஏற்படும் திடீர் தீ விபத்துகளால் காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவிடுகின்றன. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஒருவர் உயிரிழந்தார்.

காட்டுமன்னார்கோயில்: பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட உடல்கள்! - பட்டாசு ஆலை விபத்தில் 7 பெண்கள் பலி

விருதுநகர் மாவட்டம், குந்தலப்பட்டியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இவர், நாக்பூரில் பெறப்பட்ட உரிமம் மூலம் அனைத்து ஃபேன்ஸி ரக பட்டாசுகளையும் தயாரித்துவருகிறார். 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஃபேன்ஸி ரக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது வெடி மருந்துகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

இந்த விபத்தில் ஓர் அறை இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் மற்ற அறைகளில் தீ பரவாமல் தீயை அணைத்தனர் தீயணைப்புப் படையினர். இதனால், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நடந்துவரும் திடீர் தீ விபத்துகள், பட்டாசு தொழிலாளர்களை வேதனையடையச் செய்துள்ளன.

இது குறித்து பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். ``சில பட்டாசு ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பார்ப்பதற்காக சட்டத்தை மீறி பட்டாசு உற்பத்தி அறைகளில் கூடுதலாகத் தொழிலாளர்களைவைத்து வேலை வாங்கப்படுவதும், வேதிப் பொருள்களின் வீரியம் தெரியாமல் மருந்துகள் கையாளப்படுவதும்தான் பெரும் விபத்துகளுக்குக் காரணம்.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

உற்பத்தியாளர்கள் விதிமுறைப்படி ஆலைகளை நடத்துவது, தொழிலாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றால் மட்டுமே வெடி விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு