Published:Updated:

சென்னை அண்ணா சாலையிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து! - மீட்புப் பணிகள் தீவிரம்

அண்ணா சாலையிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து
அண்ணா சாலையிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து

முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேரிட்டதாகத் தெரியவந்திருக்கிறது.

சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகேயுள்ள கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னை எழும்பூர் பகுதியிலிருக்கும் நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் ராட்சத இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்டடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேரிட்டதாகத் தெரியவந்திருக்கிறது. அந்தக் கட்டடத்தில் மட்டும் சுமார் 20-க்கும் அதிகமான நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்! #chennai

Posted by Junior Vikatan on Wednesday, July 21, 2021
அடுத்த கட்டுரைக்கு