Published:Updated:

4 பேரை பலி வாங்கிய விபத்து... மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் இரவில் விபத்தில் பலியான சோகம்

தீயணைப்பு வீரர்

மீட்புப் பணிக்குப் பிறகு, தீயணைப்பு நிலையத்துக்குச் சென்றவர், இரவு சாப்பிடச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அவர் வராததால், சக ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

4 பேரை பலி வாங்கிய விபத்து... மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் இரவில் விபத்தில் பலியான சோகம்

மீட்புப் பணிக்குப் பிறகு, தீயணைப்பு நிலையத்துக்குச் சென்றவர், இரவு சாப்பிடச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அவர் வராததால், சக ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Published:Updated:
தீயணைப்பு வீரர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி (67). இவர் தன் மனைவி மங்கையர்க்கரசி (64), பேத்திகளாக பூஜா (20), ரஞ்சனா (20), பேரன் பிரதுன் (7) ஆகியோருடன், திருச்சி நவல்பட்டிலுள்ள தன் மருமகன் வீட்டுக்கு நேற்று மாலை காரில் வந்திருக்கிறார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி செவந்தாம்பட்டி அருகே வந்தபோது, காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனைத் தாண்டி எதிரேயுள்ள சாலையில் பாய்ந்திருக்கிறது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதியது மட்டுமல்லாமல், அதன் பின்னால் வந்த காரும் என மூன்று கார்களும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் மங்கையர்கரசி, ரஞ்சனா, பூஜா, எதிர்த் திசையில் வந்த காரிலிருந்த பத்மா (60) ஆகிய நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

இந்த விபத்து மீட்புப் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் முதல்நிலை வீரராகப் பணியாற்றிவந்த கிருஷ்ணகுமார் (45) தீவிரமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பின்னர் தீயணைப்பு நிலையத்துக்குத் திரும்பிய கிருஷ்ணகுமார், நேற்றிரவு சாப்பிடுவதற்காகத் தன்னுடைய பைக்கில் வெளியே சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு கிருஷ்ணகுமார் திரும்பாமல் இருக்க, சக ஊழியர்கள் அவரை தேடிச்சென்றுள்ளனர்.

அப்போது துவரங்குறிச்சி அருகே அதிகாரம் என்ற பகுதியில் கிருஷ்ணகுமார் அவருடைய பைக்குடன் கீழே விழுந்து இறந்து கிடந்திருக்கிறார். அடையாளம் தெரியாத வாகனம், கிருஷ்ணகுமாரின் பைக்கின் மோதி விபத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த துவரங்குறிச்சி போலீஸார், கிருஷ்ணகுமார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மாலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களைத் துரிதமாக மீட்டு உதவியர், அன்றைய தினம் இரவே சாலை விபத்தில் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.