Published:Updated:

`மயங்கிய தொழிலாளர்கள்; அஞ்சிய வீரர்கள்'- டெல்லி தீ விபத்தில் 11 பேரை காப்பாற்றிய `நிஜ ஹீரோ'!

அதிகாலை நேரம் என்பதால் தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ பற்றவே அதில் சிக்கி 43 தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

நிஜ ஹீரோ ராஜேஷ் சுக்லா
நிஜ ஹீரோ ராஜேஷ் சுக்லா ( twitter )

வடக்கு டெல்லி, ராணி ஜான்சி சாலையில் உள்ள ஆனஜ் மண்டி என்ற இடம், பெரும் வர்த்தகப் பகுதியாகச் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில், மிகவும் நெருக்கமான கடைகள், பொதுமக்கள் கூட்டம் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அதேபகுதியில் இருக்கும் ஒரு பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், இன்று அதிகாலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ பற்றவே அதில் சிக்கி 43 தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா
ராஜேஷ் சுக்லா
twitter

இதற்கிடையே, இந்த விபத்தில் 11 தொழிலாளர்களின் உயிர்களை தீயணைப்பு வீரர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 5.22 மணிக்கு தீ விபத்து தகவல் தெரியவந்ததும் தீயணைப்பு வாகனங்கள் தொழிற்சாலையை நோக்கி விரைந்துள்ளன. தீயணைப்பு குழுவில் ஒருவராக ராஜேஷ் சுக்லா இருந்துள்ளார். தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது நெருப்பு கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்க தொழிலாளர்களை உள்ளே நுழைந்து மீட்க பலரும் அஞ்சியுள்ளனர். ஆனால் அச்சத்தை பொருட்படுத்தாமல் வீரர் சுக்லா உள்ளே நுழைந்துள்ளார்.

ஸ்பைடர்மேன், அவெஞ்சர்களுக்கு சவால்விடும் சீனாவின்  `வெறித்தன' சூப்பர் ஹீரோ... யார் இந்த நேஷா? #Nezha

அவர் உள்ளே நுழையும் ஒரு அறைக்குள் 11 தொழிலாளர்கள் கடும் புகையால் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்த சுக்லா முதல் வேலையாக 11 தொழிலாளர்களையும் மீட்டுள்ளார். தன்னுடன் வந்த சகவீரர்களை அழைத்து மயக்கத்தில் இருந்த 11 தொழிலாளர்களையும் ஒவ்வொருவராக மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார் சுக்லா. தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களில் அவர்கள் இருந்த அறை முழுவதுமாக எரிந்துள்ளது. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அவர்களும் அந்த அறையில் எரிந்து சாம்பலாகி இருப்பார்கள்.

ராஜேஷ் சுக்லா
ராஜேஷ் சுக்லா
twitter

ஆனால் தக்க நேரத்தில் சுக்லா சென்று 11 பேரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். இந்தப் பணியில் சுக்லாவுக்கு கை மற்றும் கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுக்லாவின் வெளியே தெரியவர அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுக்லாவை டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்தார். பின்னர் சுக்லா நிஜமான ஹீரோ என்று அவர் புகழ்ந்துள்ளார்.

``3 கிலோ நகைகள், ஸ்ரீ ரெட்டியுடன் டிக்டாக், ஹீரோ ஆசை!" -`நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார்