இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி இனோவா கார் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே வரும்போது, டயர் வெடித்ததாகத் தெரிகிறது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் அங்கும் இங்கும் ஓடி கவிழ்ந்தது. இந்த நிலையில்தான், புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கும் அதிவேகத்தில் வந்த 6 கார்கள் அடுத்தடுத்து கண் இமைக்கும் நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
படுகாயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்கள் விபரம்:
சிவகங்கை ஆத்தங்குடியைச் சேர்ந்த நாகலெட்சுமி (58), புதுக்கோட்டை வேங்குப்பட்டியைச் சேர்ந்த நாகரெத்தினம் (65), புதுக்கோட்டை துடையூரைச் சேர்ந்த சிதம்பரம் (40), புதுக்கோட்டை உடையாண்டிப்பட்டி ரெங்கராஜ் (30), காரைக்குடியைச் சேர்ந்த செல்வம் (41) ஆகியோர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போலீஸார் கூறும்போது,``இனோவா கார் டயர் வெடித்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததுதான் விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஒன்றுடன் ஒன்று மோதிய மொத்த கார்களும் அதிவேகத்தில்தான் வந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதியுள்ளன என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோர விபத்தில் மொத்தமாக 30 பேர் வரையிலும் காயமடைந்து இருக்கின்றனர். இதில், ஒரு சிலர் லேசான காயங்களுடன் வீடு திரும்பி உள்ளனர். 4 குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த 12 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடக்கிறது" என்றனர்.