Published:Updated:

1,000 பேர் அமரும் இடத்தில் 7,000 பேர்?! - கேரள கால்பந்து மைதான கேலரி விபத்து விசாரணையில் அதிர்ச்சி

ஃபுட்பால் கிரவுண்ட் கேலரி விபத்து

கால்பந்து போட்டியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக மைதானத்தில் மூங்கில் மற்றும் கம்புகளால் தற்காலிக கேலரி அமைக்கப்படிருந்தது. போட்டியைக் காணவரும் ரசிகர்களிடம் டிக்கெட்டுக்கு தலா 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

1,000 பேர் அமரும் இடத்தில் 7,000 பேர்?! - கேரள கால்பந்து மைதான கேலரி விபத்து விசாரணையில் அதிர்ச்சி

கால்பந்து போட்டியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக மைதானத்தில் மூங்கில் மற்றும் கம்புகளால் தற்காலிக கேலரி அமைக்கப்படிருந்தது. போட்டியைக் காணவரும் ரசிகர்களிடம் டிக்கெட்டுக்கு தலா 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Published:Updated:
ஃபுட்பால் கிரவுண்ட் கேலரி விபத்து

கேரள மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். அதிலும் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் முக்கியமானவை. கிரிக்கெட் ரசிகர்களைவிட ஃபுட்பால் ரசிகர்களே அதிகம் எனச் சொல்லலாம். கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி ஃபுட்பால் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மலப்புரம் மாவட்டம், வண்டூர் பூங்கோடு பகுதியிலுள்ள மைதானத்தில் ஃபுட்பால் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்துள்ளது.

தற்காலிக கேலரி
தற்காலிக கேலரி

பூங்கோடு ஃப்ரெண்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி, ஒரு அணியில் ஏழு வீரர்கள் கலந்துகொள்ளும் 'செவன்ஸ் ஃபுட்பால்' என்ற பெயரில் நடத்தப்பட்டது. கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கால்பந்து அணியினர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினர். கால்பந்து போட்டியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக கிரவுண்டில் மூங்கில், கம்புகளால் தற்காலிக கேலரி அமைக்கப்படிருந்தது. போட்டியைக் காணவரும் ரசிகர்களிடம் டிக்கெட்டுக்கு தலா 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபுட்பால் ஃபைனல் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதில் கோழிக்கோடு, நெல்லிக்குத்து அணிகள் மோதின. இறுதிப்போட்டியைக் காண 8,000-க்கும் அதிகமானோர் அந்த மைதானத்தில் திரண்டுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியைக் காண வசதியாக அமைக்கப்பட்ட தற்காலிக கேலரியில் ஏழாயிரத்துக்கும் அதிகமானவர்கள் அமர்ந்து போட்டியை ரசித்துள்ளனர். விறுவிறுப்பாக கால்பந்து போட்டி நடந்துகொண்டிருந்த சமயத்தில் தற்காலிக கேலரி திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

உடைந்து விழுந்த கேலரி
உடைந்து விழுந்த கேலரி

ரசிகர்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நிலம்பூர், வண்டூர், பெருந்தல்மண்ண, மஞ்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ``தற்காலிக கேலரியில் கட்டுப்பாடு இல்லாமல் ரசிகர்கள் அமர்த்தப்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது. போட்டி நடத்தியவர்கள் பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை” என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism