Published:Updated:

ராமநாதபுரம்: கட்டுப்பாடற்ற வேகம்; நேருக்கு நேர் மோதிக்கொண்ட டூ வீலர்கள்! 4 பேரை பலிகொண்ட விபத்து

விபத்தில் உயிரிழந்தவர்கள்
விபத்தில் உயிரிழந்தவர்கள்

இளைஞர்களின் கட்டுப்பாடற்ற வேகத்தால் நான்கு உயிர்கள் பலியான இந்தக் கோர விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே நேற்றிரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் அருகே நடந்த விபதில் காயமடைந்தவர்.
ராமநாதபுரம் அருகே நடந்த விபதில் காயமடைந்தவர்.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், கருங்குடியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருடைய நண்பர் உதயகுமார். இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் ஓட்டுநராக வேலை பார்த்துவந்தனர். இவர்கள் இருவரும் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார்கள். நேற்று இரவு டூ வீலர் ஒன்றில் உப்பூர் சத்திரத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்றை முந்திக்கொண்டு மற்றொரு டூ வீலர் வேகமாக வந்திருக்கிறது.

சீர்காழி : டூவிலரில் ஆடு திருடி வந்தபோது விபத்து! - ஒருவர் பலி;  இருவர் படுகாயம்

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த டூ வீலர் எதிரே வந்த பாண்டித்துரையின் டூ வீலர் மீது மோதிய நிலையில் அருகே சென்ற காரின் பக்கவாட்டிலும் மோதியது. இதில், இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால், பலத்த காயமடைந்த தேவகோட்டை கைலாசநாதபுரத்தை சேர்ந்த வல்லரசு (19), ஹரிஹரன் (19), கருங்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை (32) மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் பலியானவர்
விபத்தில் பலியானவர்
உ.பாண்டி

விபத்தைக் கண்ட அந்தப் பகுதியில் சென்றவர்கள், காயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அத்தானூர் கிராமத்தை சேர்ந்த உதயக்குமார், சென்னையைச் சேர்ந்த தேவகெளதம் (19) ஆகியோரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவகெளதமும் உயிரிழந்தார். உதயக்குமார் கூடுதல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் பலியானவர்
விபத்தில் பலியானவர்
உ.பாண்டி

விபத்தில் உயிரிழந்த கருங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரைக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இளைஞர்களின் கட்டுப்பாடற்ற வேகத்தால் நான்கு உயிர்கள் பலியான இந்தக் கோர விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு