Published:Updated:

பைக் மீது கார் மோதி விபத்து; நான்கு பேர் உயிரிழப்பு - நடைபயிற்சி சென்றவரும் பலியான பரிதாபம்!

விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்

ராமநாதபுரம் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பைக் மீது கார் மோதி விபத்து; நான்கு பேர் உயிரிழப்பு - நடைபயிற்சி சென்றவரும் பலியான பரிதாபம்!

ராமநாதபுரம் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published:Updated:
விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கில், மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த ஜெகன் (42), ஜெகதீஷ் (22), மகேஷ் (40) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை வழக்கம் போல் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மண்டபத்திலிருந்து மரைக்காயர்பட்டிணத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் அதிவேகமாக வந்துள்ளனர். கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மரைக்காயர்பட்டிணம் பெட்ரோல் பங்கிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த மூவர் மீது மோதியதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். மேலும் தறிகெட்டு ஓடிய கார் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது மோதிவிட்டு தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் கவிழ்ந்துள்ள கார்
சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் கவிழ்ந்துள்ள கார்

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிருஷ்ணமூர்த்தி படுகாயத்துடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அவைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் சரக டி.எஸ்.பி ராஜ் மற்றும் மண்டபம் போலீஸார் விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, சம்பவம இடத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் கார் டிரைவர் தூக்கத்தில் தவறான பாதையில் வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மண்டபம் போலீஸார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism