Published:Updated:

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 4 நோயாளிகள் உயிரிழப்பு! - தொடரும் சோகம்

மருத்துவமனை தீ விபத்து
மருத்துவமனை தீ விபத்து

மும்பை அருகே அதிகாலையில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையின் தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ராவில் செயல்பட்டுவந்த பிரைம் கிரிட்டிகேர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு மின்கசிவு காரணமாக மீட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. கீழ்த்தளம் மற்றும் முதல் மாடியைக்கொண்ட இந்த மருத்துவமனையில் முதலில் கீழ்த்தளத்தில் பற்றிய தீ மளமளவென முதல் மாடிக்கும் பரவியது. நோயாளிகள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். இதனால் நோயாளிகள் சுதாரிப்பதற்குள் தீயில் சிக்கிக்கொண்டனர். மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிலரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர்.

தீ அணைக்கப்படுகிறது
தீ அணைக்கப்படுகிறது

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் நான்கு நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ.ஜிதேந்திர அவாட் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டார். மருத்துவமனையில் மொத்தம் 20 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுவந்தனர். உயிரிழந்த யாரும் கொரோனா நோயாளிகள் கிடையாது.

மகாராஷ்டிரா: ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; 22 நோயாளிகள் பலி! - நாசிக் மருத்துவமனை சோகம்

இந்தத் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாட் தெரிவித்தார். சமீபகாலமாக மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் விபத்துகள் அதிகமாக நடந்துவருகின்றன. கடந்த வாரம் மும்பை அருகேயுள்ள விரார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 15 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த மாத தொடக்கத்தில் மும்பை பாண்டூப்பிலுள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அதோடு நாசிக்கில் ஆக்ஸிஜன் டேங்க்கில் கசிவு ஏற்பட்டு 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். தொடரும் இந்தத் தீ விபத்துக்களுக்கு பொறுப்பு ஏற்று உடனே மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு