Published:Updated:

மோதிய டூ வீலர்; பற்றியெரிந்த அரசு பஸ்... பிறந்தநாளில் தீயில் கருகிய மாணவன் - திண்டுக்கலில் சோகம்

எரிந்த பஸ்

திண்டுக்கல்லில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவர்கள் விடுமுறையில் இருந்தனர். இதில் பிரவீனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு ஒரே டூ வீலரில்​ ​3 பேரும் திண்டுக்கல் சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

மோதிய டூ வீலர்; பற்றியெரிந்த அரசு பஸ்... பிறந்தநாளில் தீயில் கருகிய மாணவன் - திண்டுக்கலில் சோகம்

திண்டுக்கல்லில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவர்கள் விடுமுறையில் இருந்தனர். இதில் பிரவீனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு ஒரே டூ வீலரில்​ ​3 பேரும் திண்டுக்கல் சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

Published:Updated:
எரிந்த பஸ்

​திண்டுக்கல் மாவட்டம்,​ ​ஒட்டன்சத்திரம் அண்ணா நகர் செக் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த பிரவீன், நாகனம்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ், நரிப்பட்டியைச் சேர்ந்த நரசிம்மன் ஆகி​யோர் நண்பர்கள். மூவரும் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவருகின்றனர். திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷே​​​​​​​​​கம் என்பதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், மாணவர்கள் விடுமுறையில் இருந்தனர். இதில் பிரவீனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு ஒரு டூ வீலரில்​ ​மூன்று பேரும் ஒட்டன்சத்திரத்திலிருந்து திண்டுக்கல் சாலையில் சென்றுகொண்டிரு​ந்தனர்.

எரிந்த பஸ்
எரிந்த பஸ்

அப்​போது ​மதுரையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி 41 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தின் மீது முன் பக்கமாக டூ வீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ​டூ வீலரை ஓட்டிச் சென்ற பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

​இந்நிலையில் ​டூ வீலர் பேருந்தின் ​முன்பகுதியில் மோதி பெட்ரோல் டேங்க்கில் தீப்பற்றி ​பஸ் வேகமாக ​எரியத் தொடங்கியது. பின்னர் பேருந்து தீப்பற்றி முழுவதுமாக எரியத் தொடங்கியது. ​இதனால் பதறிய பயணிகள் ​பேருந்திலிருந்து வேகமாகக் கீழே இறங்கி​ ஓடினர்.

எரிந்த நிலையில் பஸ்
எரிந்த நிலையில் பஸ்

​தகவலறிந்து விரைந்துவந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர். மேலும் ​டூ வீலரில் வந்த இரண்டு மாணவர்கள் பலத்த காயங்களுடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறகு காயமடைந்த இரண்டு மாணவர்க​ளும் ஆபத்தான நிலையில் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்​.

​இதையறிந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ​நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டார். மேலும் இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கருகிய டூவிலர்
கருகிய டூவிலர்

இ​து குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``மாணவர்கள் மூன்று பேரும் அஜாக்கிரதையாக டூ வீலரை ஓட்டிச் சென்றுள்ளனர். மேம்பாலத்தில் எதிரே வந்த அரசு பஸ்ஸில் மோதியதில், தீப்பற்றியிருக்கிறது. உடனடியாகக் கீழே இறங்கிவந்த டிரைவரும் பயணிகள் சிலரும் டூ வீலரின் பின்னே அமர்ந்திருந்த மாணவர்களை மீட்டுள்ளனர். ஆனால் டூ வீலரை ஓட்டிவந்த பிரவீன் பஸ் வேகமாக மோதியதில் முன்பகுதியில் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவரை மீட்க முயன்றபோது தீ வேகமாகப் பற்றி எரிந்து அவர் முழுவதும் தீயில் கருகிவிட்டார். அரை மணி நேரத்துக்குள்ளாக இந்தச் சம்பவம் நடந்து முடிந்ததால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் மாணவனின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது” என்றார்.