Published:Updated:

அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசல்; படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவி தவறிவிழுந்து பலியான சோகம்!

மாணவி தவறிவிழுந்து பலியான சோகம்

அரசுப் பள்ளி மாணவி பேருந்திலிருந்து தவறிவிழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகள் சக்திமாரி (16). பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சக்திமாரி தினமும் தனது ஊரிலிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை, சக்திமாரி வழக்கம்போல் பள்ளி முடிந்து பனையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் ஏராளமானோர் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பேருந்தின் முன்பகுதியில் படியில் நின்றுகொண்டிருந்த மாணவி சக்திமாரி திடீரென பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

சக்திமாரி
சக்திமாரி
அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசல்; படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவி தவறிவிழுந்து பலியான சோகம்!

அதில் படுகாயமடைந்த மாணவி சக்திமாரியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சக்திமாரி சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்திலிருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.