Published:Updated:

கல்குவாரி பள்ளத்தில் மூழ்கி பாட்டி, பேரக்குழந்தைகள் உயிரிழப்பு - திண்டிவனம் அருகே சோகம்

சம்பவம் நடந்த கல்குவாரி பள்ளம்

கல்குவாரி பள்ளத்தில் துணி துவைக்கச் சென்றபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரி பள்ளத்தில் மூழ்கி பாட்டி, பேரக்குழந்தைகள் உயிரிழப்பு - திண்டிவனம் அருகே சோகம்

கல்குவாரி பள்ளத்தில் துணி துவைக்கச் சென்றபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சம்பவம் நடந்த கல்குவாரி பள்ளம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (60). இவரின் மகள் விஜயஸ்ரீயை, அருகில் உள்ள தென்கலவாய் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 16, 14 வயதில் இரு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களின் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக, தன் தாய்வீடான பெருமுக்கலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் விஜயஸ்ரீ. இந்தத் தம்பதியர் வெளியில் சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மூன்று பேரும்... பாட்டி புஷ்பாவுடன் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேர்.
உயிரிழந்த நான்கு பேர்.

துணிகளைத் துவைத்துக்கொண்டு வருவதற்காக அருகிலுள்ள கல்குவாரி பள்ளத்துக்கு பாட்டியுன் குழந்தைகள் மூன்று பேரும் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த கல்குவாரி பள்ளத்தில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக நான்கு பேரும் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் மூழ்கியவர்களின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, பிரம்மதேசம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்புதுறையினர், காவல்துறை அதிகாரிகள், நீரில் மூழ்கிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறகு, பிரேத பரிசோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்த பிரம்மதேசம் போலீஸார், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பாட்டியுடன் சேர்ந்து மூன்று பேரக்குழந்தைகளும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism