Published:Updated:

தேனியிலிருந்து சொந்த ஊர் திரும்பும்போது வடமாநிலத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர்

தேனியில் இருந்த மகாராஷ்ட்ரா புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களில் ஒருவர், மதுரை ரயில்நிலையம் செல்லும் வழியில், பேருந்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் கரும்பு ஆலைகள், மகாராஷ்ட்ராவிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து, தேனி கரும்பு விவசாயிகளிடம் அனுப்புகிறார்கள். இவர்கள், கரும்பை வெட்டி, தங்களது வண்டியில் ஏற்றி, கரும்பு ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். இதனால், கரும்பு விவசாயிகளுக்குச் செலவு குறைவு. எனவே, வடமாநிலத் தொழிலாளர்களையே பெரும்பாலான விவசாயிகள் அழைக்கின்றனர். பல மாதங்கள் தேனியில் தங்கி, மாவட்டம் முழுவதும் கரும்பு வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.

``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்
உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர்

அந்த வகையில், வைகை அணை அருகே உள்ள சர்க்கரை ஆலையின் ஏற்பாட்டில், மகாராஷ்ட்ராவிலிருந்து 103 தொழிலாளர்கள் தேனி அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை ஏதும் கிடைக்காமலும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமலும் தவித்தனர். இதை அடுத்து மாவட்ட நிர்வாகம், இவர்கள் அனைவரையும் தேவதானப்பட்டி அருகே உள்ள சத்தா கோவில்பட்டி அரசுப் பள்ளியில் தங்கவைத்திருந்தது.

இந்நிலையில், நேற்று மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்ட்ரா மாநிலம் புறப்பட்டுச் செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், மூன்று அரசுப் பேருந்தில் 103 தொழிலாளர்களும் மதுரை புறப்பட்டனர். 3-வதாக சென்ற பேருந்தில் பயணித்த சிவாஜி ராம்தன் (வயது 45) என்பவர், எச்சில் துப்புவதற்காகப் பேருந்தில் பின்பக்க படிக்கட்டில் வந்து நின்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி

உடலைக் கைப்பற்றிய தேவதானப்பட்டி போலீஸார், கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் தவிர, மற்ற அனைவரும் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றனர். ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அடுத்த கட்டுரைக்கு