Published:Updated:

குஜராத்: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மருமகன் கார் மோதி 6 பேர் பலி! - ஓட்டுநர் கைது

விபத்து - பலி

வேகமாக வந்த கியா செல்டோஸ் எஸ்.யூ.வி கார் ஒன்று, முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோ-பைக்மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

குஜராத்: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மருமகன் கார் மோதி 6 பேர் பலி! - ஓட்டுநர் கைது

வேகமாக வந்த கியா செல்டோஸ் எஸ்.யூ.வி கார் ஒன்று, முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோ-பைக்மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
விபத்து - பலி

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில், சோஜித்ரா கிராம நெடுஞ்சாலையில் நேற்றிரவு வேகமாக வந்த கியா செல்டோஸ் எஸ்.யூ.வி கார் ஒன்று, முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோ-பைக்மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆட்டோ, பைக்கில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் மோதியதில் 6 பேர் பலி
கார் மோதியதில் 6 பேர் பலி

இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் குடிபோதையில் வந்ததும், காரை ஓட்டியது காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மருமகன் என்றும் தெரியவந்திருக்கிறது.

இது குறித்து ஊடகத்திடம் பேசிய ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா, ``நேற்றிரவு 7 மணியளவில் பைக், ஆட்டோமீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ, பைக்கில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கார் ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" எனத் தெரிவித்தார்.

கைது
கைது

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ மருமகனின் காரை ஓட்டிய ஓட்டுநர் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.