Published:Updated:

மேற்கு வங்கம்: விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து! - 3 பேர் பலி; 20-க்கும் அதிகமானோர் படுகாயம்

விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
News
விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

மேற்கு வங்கத்தில் இன்று மாலை பிகானெர் விரைவு வண்டியின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டன. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் மாநிலம் நோக்கிச் சென்ற பிகானெர் விரைவு ரயில் (Guwahati-Bikaner Express), வடக்கு வங்காளத்திலுள்ள ஜல்பைகுரியின் (Jalpaiguri) மொய்னகுரி பகுதிக்கு அருகே வந்தபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
Twitter/@therailstationy

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கெனவே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடந்துவருகின்றன. இதுவரை ஏறத்தாழ 20 பயணிகள் காயமடைந்திருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ``பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்துத் தெரிவித்திருக்கிறேன். விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்துவருகிறேன்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz