Published:Updated:

சைரஸ் மிஸ்த்ரி: 9 நிமிடங்களில் 20 கி.மீ; அதிவேகமாக ஓட்டிய பெண் - விபத்து குறித்து போலீஸ் சொல்வதென்ன?

விபத்துக்குள்ளான கார்

தொழிலதிபர் சைரஸ் மிஸ்த்ரி காரில் பயணம் செய்தபோது சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால்தான் சாலை விபத்தில் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.

சைரஸ் மிஸ்த்ரி: 9 நிமிடங்களில் 20 கி.மீ; அதிவேகமாக ஓட்டிய பெண் - விபத்து குறித்து போலீஸ் சொல்வதென்ன?

தொழிலதிபர் சைரஸ் மிஸ்த்ரி காரில் பயணம் செய்தபோது சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால்தான் சாலை விபத்தில் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.

Published:Updated:
விபத்துக்குள்ளான கார்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும், கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்தின் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி நேற்று பிற்பகல் மும்பை அருகே பால்கர் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். சைரஸ் மிஸ்த்ரி மரணம் தொழில்துறையினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சைரஸ் மிஸ்த்ரியுடன் பயணம் செய்த அவரின் நண்பர் ஜஹாங்கிர் என்பவரும் விபத்தில் காலமானார். சைரஸ் மிஸ்த்ரி சென்ற கார் பால்கர் அருகே சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழப்பதற்கு காரணம் சைரஸ் காரில் பயணம் செய்தபோது சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதோடு காரில் இருந்த ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. சைரஸ் தன்னுடைய நண்பர்களுடன் குஜராத்திலுள்ள உத்வாதா தீக்கோயிலுக்குச் சென்றுவிட்டு வரும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பார்சி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உத்வாதாவிலிருக்கும் தீக்கோயிலுக்குச் சென்றுவருவது வழக்கம். சைரஸ் தன்னுடைய நண்பர்கள் ஜஹாங்கீர், டாரியஸ், டாரியஸ் மனைவி டாக்டர் அனகிதா ஆகியோர் தீக்கோயிலுக்குச் சென்று விட்டு காரில் வந்துகொண்டிருந்தனர். இதில் சைரஸ், அவர் நண்பர் ஜஹாங்கிர் ஆகியோர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.

சைரஸ் மிஸ்த்ரி
சைரஸ் மிஸ்த்ரி

டாரியஸ் மனைவி காரை ஓட்டினார். அவருக்கு அருகில் அவருடைய கணவர் டாரியஸ் இருந்தார். முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றதால் இந்த விபத்து நடந்திருப்பது சாலை விபத்தை நேரில் பார்த்த ஒருவர் மூலம் தெரியவந்தது. சாலையோரம் கேரேஜ் வைத்திருக்கும் நிதிஷ் என்பவர் கார் விபத்தை நேரில் பார்த்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெண் ஒருவர் காரை ஓட்டிவந்தார். அந்த கார் தவறான வழித்தடத்தில் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச்செல்ல முயன்றது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த டிவைடரில் மோதிக்கொண்டது. உடனே சம்பவ இடத்துக்கு நாங்கள் ஓடினோம். ஆனால் காரையோ அல்லது அதில் இருந்தவர்களையோ தொடவில்லை” என்று தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்ததும் விபத்துக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இரண்டு பேரும் இன்று மும்பை மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். கடந்த ஜூன் 28-ம் தேதிதான் சைரஸின் தந்தை காலமானார். இதே போன்று இந்த விபத்தில் ஜஹாங்கிரும் இறந்துவிட்டார். அவருடைய தந்தையும் கடந்த மாதம் 29-ம் தேதிதான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

விபத்து குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், சோதனைச்சாவடியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் பிற்பகல் 2:21 மணியளவில் இந்த கார் கடந்து சென்றது தெரியவந்தது. சோதனைச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சூர்யா ஆற்றின் பாலத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது, பிற்பகல் 2:30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இந்த தூரத்தைச் கார் சுமார் ஒன்பது நிமிடங்களில் கடந்தது என்பதை இது காட்டுகிறது. அதாவது 9 நிமிடங்களில் 20 கிலோமீட்டரைக் கடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.