Published:Updated:

சாலையோர மரத்தில் மோதி நொறுங்கிய கார்! - தேசிய ஹாக்கி வீரர்களுக்கு நேர்ந்த சோகம்

தயான் சந்த் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கச் சென்ற ஹாக்கி வீரர்களுக்கு நேர்ந்த சோகம்.

Car accident
Car accident ( ANI )

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த கோர விபத்தில் 4 ஹாக்கி வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
accident

மத்தியப் பிரதேச மாநிலம் இட்டாசி என்னும் நகரிலிருந்து ஹோஷங்காபாத் என்னும் இடத்துக்கு தயான் சந்த் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க சென்ற தேசிய வீரர்கள் 7 பேர் பயணம் செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாகப் பயணம் செய்தபோது, அதிக வேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்தக் கோர விபத்தில் கார் நொறுங்கியது. இந்நிலையில் காரில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே பலியானதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Car accident
Car accident
ANI

அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஷெஹ்னவாஸ் கான், ஆதர்ஷ் ஹர்துவா, ஆஷிஷ் லால் மற்றும் அனிகெட் ஆகிய நான்குபேர் விபத்தில் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.