Published:Updated:

தொழில்நுட்பக் கோளாறு; தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் - 7 பேர் பலி

ரயில் மோதியதில் 7 பேர் பலி- ஆந்திரா

ஆந்திராவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிவழியில் ரயில் நின்றபோது, ரயிலிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் மீது எதிர்த்திசையில் வந்த கொல்கத்தா செல்லும் ரயில் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, எதிர்த்திசையில் வந்த கொல்கத்தா செல்லும் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``உயிரிழந்த ஏழு பேரும் செகந்தராபாத் - கவுஹாத்தி அதிவிரைவு ரயில் பயணிகள். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படுவ கிராமம் அருகே ரயில் நின்றபோது, இந்த ஏழு பேரும் ரயிலிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த கொல்கத்தா செல்லும் கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள்மீது மோதியதில் ஏழு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்" என்று தெரிவித்துள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism