Published:Updated:

ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி - மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்!

சிறுவர்கள் மூழ்கி இறந்த கல்குவாரி குட்டை

செங்காட்டுக்குட்டை பகுதியில் இருந்த கல்குவாரி குட்டைக்கு அருகே மூன்று சிறுவர்களும் வந்த சைக்கிள் நின்றிருந்ததைப் பார்த்து அங்கு தேடியபோதுதான் சிறுவன் ராகவனின் உடல் மட்டும் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டனர்.

ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி - மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்!

செங்காட்டுக்குட்டை பகுதியில் இருந்த கல்குவாரி குட்டைக்கு அருகே மூன்று சிறுவர்களும் வந்த சைக்கிள் நின்றிருந்ததைப் பார்த்து அங்கு தேடியபோதுதான் சிறுவன் ராகவனின் உடல் மட்டும் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டனர்.

Published:Updated:
சிறுவர்கள் மூழ்கி இறந்த கல்குவாரி குட்டை

ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4-வது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ராகவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் நந்தகிஷோர் (10), ஏழாவது குறுக்கு வீதியைச் சேர்ந்த பாலன் என்பவரின் மகன் சிபினேஷ் (11) ஆகிய மூன்று பேரும் காமராஜ் நகரிலுள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தனர்.

நேற்று முன்தினம் மாலை மூன்று சிறுவர்களும், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே செங்காட்டுகுட்டையிலுள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன் பிடிப்பதற்காகத் தூண்டில் போட்டுக் காத்திருந்த சிபினேஷ், குவாரி குட்டைக்குள் தவறி விழுந்தான். அவனைக் காப்பாற்ற சென்ற மற்ற இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். பல ஆண்டுகளாக இருக்கும் அந்தக் கல்குவாரி குட்டையின் அடியில் சேறு இருந்ததுடன், அதிக ஆழமாக இருந்ததால் மூவரும் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்திருக்கின்றனர்.

சிபினேஷ்
சிபினேஷ்

அப்போது அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால், அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த மூவரும் மூழ்கினர். மாலை 6 மணி ஆகியும் சிறுவர்கள் வரவில்லையே எனக் கருதிய அவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். செங்காட்டுக்குட்டை பகுதியில் இருந்த கல்குவாரி குட்டைக்கு அருகே மூன்று சிறுவர்களும் வந்த சைக்கிள் நின்றிருந்ததைப் பார்த்து அங்கு தேடியபோதுதான் ராகவனின் உடல் மட்டும் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டனர். அதன் பின்னர்தான் மூன்று சிறுவர்களும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து அந்தியூர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராகவன், நந்தகிஷோர்
ராகவன், நந்தகிஷோர்

அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், அரை மணி நேரம் அவர்களது உடலைத் தேடி, மூன்று சிறுவர்களின் சடலங்களையும் மீட்டார்கள். மீட்கப்பட்ட சிறுவர்களின் சடலங்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உயிரிழந்த ராகவன், நந்தகிஷோர் இருவரும் உறவினர்கள். நந்தகிஷோரின் தாயார் கடந்த ஆண்டு கொரோனாவால் பலியானார் என்பதும், தந்தை அரவணைப்பில் வளர்ந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறவினர்கள் கதறல்
உறவினர்கள் கதறல்

மூன்று சிறுவர்களும் மூழ்கி உயிரிழந்த கல்குவாரி குட்டை அதிமுக-வைச் சேர்ந்த பிரமுகருக்குச் சொந்தமானது என்றும், அந்த குவாரியை மூடாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.