Published:Updated:

மதுரை: புதிதாகக் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து! - ஒருவர் பலி

மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து
மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் தூரத்தைக் குறைக்க, மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி-யிலிருந்து நத்தம் வரையான தூரத்துக்கு புதிய நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

இதில் தல்லாகுளத்திலிருந்து திருப்பாலை வரையிலான 7.1/2 கிலோமீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது.

இதற்காக மத்திய அரசு சாலை மேம்பாட்டு ஆணையம் கண்காணிப்பில் வேகமாக வேலை நடந்துவந்த நிலையில், நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் கட்டுமானப் பணியின்போது பறக்கும் பாலத்தின் சர்வீஸ் சாலை அமைக்கும் வகையில் கர்டர் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, கர்டர் சரியாக ஃபிட் ஆகவில்லை. அதோடு தொழிலாளிகள் நின்றுகொண்டிருந்த ஹைட்ராலிக் கிரேன் முறிந்து விபத்து ஏற்பட்டதால் ஒரு தொழிலாளி மரணமடைந்தார்.

மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து
மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து

இந்தச் சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதிகமான நிதித்திட்டத்தில் நடைபெறும் மத்திய அரசின் பால வேலைகள் தரமில்லாமல் நடப்பதாக பொதுமக்கள் புகார் எழுப்புகிறார்கள்.

விபத்து ஏற்பட்ட பகுதியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு