Published:Updated:

டெல்லி: புறப்பட்ட சில விநாடிகளில் இன்ஜினில் தீ... உயிர்தப்பிய இண்டிகோ விமானப் பயணிகள் 177 பேர்|Video

விமானத்தில் தீப்பிழம்பு ( Twitter )

டெல்லியில் இண்டிகோ விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. எனினும், விமானத்தின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக 184 பேர் உயிர்தப்பினர்.

டெல்லி: புறப்பட்ட சில விநாடிகளில் இன்ஜினில் தீ... உயிர்தப்பிய இண்டிகோ விமானப் பயணிகள் 177 பேர்|Video

டெல்லியில் இண்டிகோ விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. எனினும், விமானத்தின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக 184 பேர் உயிர்தப்பினர்.

Published:Updated:
விமானத்தில் தீப்பிழம்பு ( Twitter )

டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு இண்டிகோ விமானம் 184 பேருடன் பெங்களூருக்குப் புறப்படத் தயாராக இருந்தது. இதில் 177 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்டப்பட்டபோது அதன் ஓர் இன்ஜினிலிருந்து தீப்பிழம்பு வந்தது. விமானத்தின் இறக்கையிலிருந்து இந்தத் தீப்பிழம்பு வந்தது. உடனே பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமானம் புறப்பட்டுச் செல்வது கைவிடப்பட்டது. பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தீ விபத்து இரவு 9:45 மணிக்கு ஏற்பட்டது. ஆனாலும் பயணிகள் அனைவரும் தொடர்ந்து அதே விமானத்தில் இருந்தனர். இரவு 11 மணிக்குத்தான் விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டனர்.

டெல்லி: புறப்பட்ட சில விநாடிகளில் இன்ஜினில் தீ... உயிர்தப்பிய இண்டிகோ விமானப் பயணிகள் 177 பேர்|Video

நள்ளிரவில் வேறு விமானம் மூலம் பயணிகள் அனைவரும் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது குறித்து விமானத்தில் இருந்த ஒரு பெண் கூறுகையில், ``விமானம் புறப்பட 5 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில் அதன் இறக்கையில் தீப்பிழம்பு வந்தது. சிறிது நேரத்தில் தீயின் அளவு அதிகரித்தது. விமானம் உடனே நிறுத்தப்பட்டது. இன்ஜினில் கோளாறு என்று பைலட் எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் தொடர்ந்து விமானத்தில் இருந்தோம். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தனர். உடனே தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். விமானம் பார்க்கிங் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வேறு விமானத்தை ஏற்பாடு செய்து எங்களை அனுப்பிவைத்தனர். ஆரம்பத்தில் எங்களுக்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால், விமானப் பணியாளர்கள் எங்களது பயத்தைப் போக்கினர். விமானத்தில் ஏராளமான முதியவர்களும் குழந்தைகளும் இருந்தனர்” என்று தெரிவித்தார்.

அந்தப் பெண் விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்தை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``டெல்லியிலிருந்து பெங்களூரு புறப்பட்ட 6இ2131 விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு இன்ஜின் வேலை செய்யவில்லை. எனவே, விமானம் புறப்படுவது கைவிடப்பட்டு விமானம் பாதுகாப்பான முறையில் பார்க்கிங் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. அனைத்துப் பயணிகளும் வேறு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து விமான நிலையத்தில் இருந்த மற்றொருவர் கூறுகையில், ``இண்டிகோ விமானம் புறப்பட்டபோது அடுத்து புறப்படத் தயார்நிலையில் இருந்த ஸ்பைஸ் ஜெட் விமான பைலட்தான் இண்டிகோ விமானத்திலிருந்து தீப்பிழம்பு வருவதை கவனித்து விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்” என்றார். இது குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.