Published:Updated:

சார்ஜ் போடப்பட்ட மொபைல்... பேட்டரி வெடித்து இறந்த குழந்தை; என்ன நடந்தது?

charge ( pixabay )

``பலியான குழந்தையின் தந்தை, ஒரு கூலித் தொழிலாளி. மின் இணைப்பில்லாத வீட்டில் வசித்து வருகிறார். ஒளிவிளக்குகள் மற்றும் பேட்டரியை சார்ஜ் செய்ய சோலார் தகடை இவர் குடும்பத்தினர் உபயோகித்து வருகிறார்கள்.’’

சார்ஜ் போடப்பட்ட மொபைல்... பேட்டரி வெடித்து இறந்த குழந்தை; என்ன நடந்தது?

``பலியான குழந்தையின் தந்தை, ஒரு கூலித் தொழிலாளி. மின் இணைப்பில்லாத வீட்டில் வசித்து வருகிறார். ஒளிவிளக்குகள் மற்றும் பேட்டரியை சார்ஜ் செய்ய சோலார் தகடை இவர் குடும்பத்தினர் உபயோகித்து வருகிறார்கள்.’’

Published:Updated:
charge ( pixabay )

மொபைல் போன்கள் வெடித்து, மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இம்முறை, 8 மாத குழந்தை, மொபைல் போன் வெடித்து சிதறியதில் உயிரிழந்திருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் பரேலி நகரத்தில், 8 மாத குழந்தையின் பக்கத்தில் சோலார் தகடில் சார்ஜர் போட்டு வைத்திருந்த மொபைல் போனின் பேட்டரி வெடித்துள்ளது. 6 மாதத்துக்கு முன்பு வாங்கப்பட்ட அந்த மொபைலில், ஏற்கெனவே பேட்டரி உப்பி இருந்த நிலையில், அந்த பேட்டரி சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறியுள்ளது.

Mobile
Mobile

இந்தச் சம்பவத்தன்று குழந்தையின் தாய் அருகில் இல்லை. தன்னுடைய மற்றொரு மகளின் அழுகுரல் கேட்டு அங்கு விரைந்துள்ளார். அப்போதுதான் குழந்தை தீக்காயங்களுடன் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து, குழந்தையை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ``பெற்றோரின் அலட்சியத்தால் இந்தத் துயரம் நடந்துள்ளது. ஃபரித்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சோமி கிராமத்தில் வசிக்கும் 30 வயதான சுனீல் குமார் காஷ்யப், பலியான குழந்தையின் தந்தை. இவர் ஒரு கூலித் தொழிலாளி. மின் இணைப்பில்லாத வீட்டில் வசித்து வருகிறார். ஒளிவிளக்குகள் மற்றும் பேட்டரியை சார்ஜ் செய்ய சோலார் தகடை இவர் குடும்பத்தினர் உபயோகித்து வருகிறார்கள். சுனீல் வேலைக்குச் சென்ற பின் அவரின் மனைவி குசும் வீட்டில் குழந்தைகளுடன் இருப்பார்.

சார்ஜ் போடப்பட்ட மொபைல்... பேட்டரி வெடித்து இறந்த குழந்தை; என்ன நடந்தது?
pixabay

சம்பவம் நடந்த அன்று மதிய உணவுக்குப் பின், குசும் தன் இரண்டு குழந்தைகளையும் வெவ்வேறு கயிற்றுக் கட்டிலில் உறங்க வைத்துள்ளார். 8 மாத குழந்தை உறங்கிய கட்டிலில் மொபைல் போனை வைத்துள்ளார். போன் வெடித்து சிதறி உள்ளது.

சம்பவம் குறித்து எந்த புகாரும் இதுவரை கொடுக்கப்படவில்லை. எனவே, குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எங்களுடைய விசாரணையில், இது ஒரு விபத்து என்று தெரியவந்துள்ளது'' எனத் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாய், ``பக்கத்து வீட்டினரிடம் பேசிக் கொண்டிருந்தேன். முதல் குழந்தை நந்தினியின் அழுகுரல் கேட்டு ஓடினேன். கயிற்றுக் கட்டிலில் மொபைல் வெடித்து எரிந்து போய் இருந்தது. இரண்டாவது குழந்தை நேஹா மோசமாக எரிந்திருந்தாள். என் மகளின் உயிரை மொபைல் போன் பறிக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. இதில் உள்ள ஆபத்து தெரிந்திருந்தால் அதை அங்கு வைத்திருக்கவே மாட்டேன்’’ எனக் கண்ணீரோடு கூறியுள்ளார்.

சார்ஜ் போடப்பட்ட மொபைல்... பேட்டரி வெடித்து இறந்த குழந்தை; என்ன நடந்தது?
pixabay

சுனீலின் சகோதரர் அஜய் குமார் கூறுகையில், ``நாங்கள் ஏழைகள். இன்னும் கீ - பேட் போன்களையே பயன் படுத்துகிறோம். யு.எஸ்.பி கேபிளை பயன்படுத்தி போன் சார்ஜ் ஆகிறது. ஆனால், அதோடு அடாப்டர் இணைக்கப்படவில்லை; அதனால்தான் போன் வெடித்துள்ளது. என் தம்பியிடம் அதிக பணம் இல்லை. தனியார் மருத்துவமனையில் நேஹாவுக்கு சிகிச்சை அளித்திருந்தால், உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்'' என வருத்தத்தோடு கூறியுள்ளார்.

இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. எனவே, பெற்றோர் எச்சரிக்கையுடன் இருந்து, குழந்தைகளிடமிருந்து எலக்ட்ரிக் பொருள்களைத் தள்ளி வைக்க வேண்டும்.