Published:Updated:

கார் டயர் வெடித்து விபத்து; தாய், மகன் பலி - கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!

விபத்து

காரியாபட்டி அருகே, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பிய குடும்பத்தினர், சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கார் டயர் வெடித்து விபத்து; தாய், மகன் பலி - கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!

காரியாபட்டி அருகே, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பிய குடும்பத்தினர், சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விபத்து

திண்டுக்கல் மாவட்டம், எரியோடையைச் சேர்ந்தவர் ஆனந்த் (32). சுதந்திரத் தின தொடர் விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட அவர் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, ஆனந்த், அவருடைய மனைவி உத்திரசெல்வி (28), ஆனந்தின் தாய் மீனா (53), பாம்பாட்டி மணப்பாறையைச் சேர்ந்த உறவினர்கள் அய்யத்துரை (38), அவருடைய மனைவி மாலா (35), அய்யாத்துரை-மாலா தம்பதியரின் மகன் யோகித் (8) ஆகிய ஆறு பேரும் 'பொலிரோ' காரில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்துள்ளனர்.

கார்
கார்

தொடர்ந்து அவர்கள், சாமி தரிசனம் செய்துவிட்டு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர் திரும்பியுள்ளனர். காரை, ஆனந்த் ஓட்டி வந்திருக்கிறார். அவர்கள், விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது காரின் பின்பக்க இரண்டு டயர்களும் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆனந்த், மீனா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்றவர்கள், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்‌. விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து ஆவியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய குடும்பத்தினர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.