Published:Updated:

கரூர்: கல்குவாரியில் மண்சரிவு; 500 டன் எடையுள்ள ராட்சதப் பாறைகள் உருண்டு விபத்து; லாரி ஓட்டுநர் பலி

பாறைக்குக் கீழ் டிப்பர் லாரி ( நா.ராஜமுருகன் )

கரூர் அருகே கல்குவாரியில் 500 டன் எடையுள்ள ராட்சதப் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானதில், லாரி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கரூர்: கல்குவாரியில் மண்சரிவு; 500 டன் எடையுள்ள ராட்சதப் பாறைகள் உருண்டு விபத்து; லாரி ஓட்டுநர் பலி

கரூர் அருகே கல்குவாரியில் 500 டன் எடையுள்ள ராட்சதப் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானதில், லாரி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
பாறைக்குக் கீழ் டிப்பர் லாரி ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கிவருகின்றன. அந்த வகையில், புன்னம் சத்திரம் அருகே உள்ள குப்பம் கிராமத்திலுள்ள காங்கேயம்பாளையத்தில் என்.டி.சி என்ற தனியார் கல்குவாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 12 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்றில் கற்களை ஏற்றிக்கொண்டு, சேங்கல் அருகே உள்ள பாப்பையம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா (41) என்பவர் கல்குவாரியிலிருந்து மேலே செல்ல வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 500 டன் கொண்ட ராட்சதப் பாறை ஒன்று எதிர்பாராதவிதமாக லாரியின் மீது உருண்டு விழுந்தது.

சுப்பையா
சுப்பையா
நா.ராஜமுருகன்

இதனால், டிப்பர் லாரியில் இருந்த மூன்று பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து, கல்குவாரி நிறுவனம் அதிகாலை வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், காலை 6 மணியளவில் மீட்புப் பணியைத் தொடங்கிய தீயணைப்புத்துறையினர், மதியம் 2 மணி அளவில் கல்குவாரியில் சிக்கித் தவித்த ஹிட்டாச்சி ஓட்டுநர்கள் கார்த்திக் (23), ராஜ்குமார் (20) என்ற இரு இளஞர்களை உயிருடன் கயிறு கொண்டு மீட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் சுப்பையாவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாறையை வெடிவைத்து இரண்டாகப் பிளக்க முடிவெடுக்கப்பட்டது. அப்படி, அந்தப் பாறையை வெடி வைத்து தகர்த்ததோடு, இயந்திரத்தின் மூலம் லாரியின் முன் பகுதியை அகற்றினர். இதில், உடல் நசுங்கிய நிலையில் லாரி ஓட்டுநர் சுப்பையா மீட்கப்பட்டார். இதற்கிடையே கல்குவாரியில் மீட்கப்பட்ட உடலை போலீஸார் பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், உயிரிழந்த சுப்பையாவின் உறவினர்கள், உரிய இழப்பீடு வழங்க கல்குவாரி நிறுவனம் உறுதி அளிக்கக் கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குவாரியில் குவிந்த மக்கள்
கல்குவாரியில் குவிந்த மக்கள்
நா.ராஜமுருகன்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீஸார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவதாக கல்குவாரி நிறுவனம் தெரிவித்தால், மாலை 5 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டனர். ஓட்டுநரின் உடலை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்த லாரி ஓட்டுநர் சுப்பையாவுக்கு உமாதேவி என்ற மனைவியும், காயத்ரி, திவ்யா, மதியழகன் என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். ராட்சதப் பாறை உருண்டு விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism