Published:Updated:

கரூர்: கொரோனா விடுமுறை; தோட்டத்துக் கிணற்றில் நீச்சல்! - பாட்டியோடு பேத்தியும் பலியான சோகம்

உயிரிழந்த வர்ஷினி
உயிரிழந்த வர்ஷினி

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது, வர்ஷினி திடீரென பயந்திருக்கிறார். இதனால், தனது பாட்டி மல்லிகாவை வர்ஷினி கட்டிப்பிடித்துக்கொண்டதால், தடுமாறிய மல்லிகா, வர்ஷினியோடு சேர்ந்து நீரில் மூழ்கினார்.

கொரோனா விடுமுறையால், வீட்டிலிருந்த சிறுமி ஒருவர் நீச்சல் பழகக் கேட்டதால், அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த பெண்ணும், அந்தச் சிறுமியும் கிணற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம், உறவினர்களை சோகமடையவைத்திருக்கிறது.

உயிரிழந்த வர்ஷினி
உயிரிழந்த வர்ஷினி

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே முத்துசோளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. கொரோனா பரவல் காரணத்தால், பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மல்லிகா வீட்டுக்கு வந்த அவரது அக்காள் பேத்தியான வர்ஷினி (வயது 11), தனக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும்படி மல்லிகாவிடம் கேட்டிருக்கிறார். இதனால், பேத்தியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மல்லிகா, அதே பகுதியிலுள்ள தோட்டத்துக் கிணற்றில், சிறுமிக்கு நீச்சல் கற்றுத் தருவதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு கிணற்றில் இறங்கி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது, வர்ஷினி திடீரென பயந்திருக்கிறார். அதனால், தனது பாட்டி மல்லிகாவை வர்ஷினி கட்டிப்பிடித்துக்கொண்டதால், தடுமாறிய மல்லிகா, வர்ஷினியுடன் சேர்ந்து நீரில் மூழ்கினார். இதைக் கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து மீட்பதற்கு, அங்கு குவிந்தனர். கிணற்று நீரில் குதித்து, நீரில் மூழ்கிய அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.

நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்! - உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது
உயிரிழந்த வர்ஷினி
உயிரிழந்த வர்ஷினி

ஆனால், இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து, க.பரமத்தி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு, தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்படி, தகவலறிந்த கரூர் தீயணைப்புத்துறையினர், ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விடுமுறையில் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பிய பேத்திக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்ற பாட்டியும் பேத்தியும் கிணற்று நீரில் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு