Election bannerElection banner
Published:Updated:

கரூர்: மின்பெட்டிக்குப் பொட்டுவைத்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்! - ஆயுதபூஜைக் கொண்டாட்ட சோகம்

குளித்தலை அரசு மருத்துவமனை
குளித்தலை அரசு மருத்துவமனை

தனது தோட்டத்திலிருந்த மின்சாரப் பெட்டிக்கு பொட்டு வைத்திருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கியெறியப்பட்டார். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குளித்தலை அருகே ஆயுத பூஜையைக் கொண்டாடும்விதமாக தோட்டத்திலுள்ள மின்சாரப் பெட்டிக்கு பொட்டுவைத்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குளித்தலை
குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் ஆயுத பூஜையைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமானார்.

கரூர்: பட்டப்பகலில் கத்திமுனையில் 15 பவுன் நகை வழிப்பறி! - ஆசிரியைகளுக்கு நேர்ந்த சோகம்

தனது வீட்டிலுள்ள பொருள்களை சுத்தம் செய்து, அந்தப் பொருள்களுக்கு பொட்டுவைத்து, சாமி கும்பிட்டார். பின்னர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்திலிருந்த மின்சாரப் பெட்டிக்கு பொட்டு வைத்திருக்கிறார்.

குளித்தலை
குளித்தலை

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கியெறியப்பட்டார். இதனால், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், குளித்தலை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் குளித்தலை காவல் நிலைய போலீஸார், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர். மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

மார்ச்சுவரி
மார்ச்சுவரி

ஆயுதபூஜையையொட்டி, தனது தோட்டத்து மின்சாரப் பெட்டிக்கு பொட்டு வைக்கும்போது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு