Published:Updated:

நீலகிரி: அலட்சியமாக நடந்த கட்டுமான பணி?! - மண்சரிவில் பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்

மண்சரிவு

மண்சரிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது.

நீலகிரி: அலட்சியமாக நடந்த கட்டுமான பணி?! - மண்சரிவில் பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்

மண்சரிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது.

Published:Updated:
மண்சரிவு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள மஞ்சனக்கொரை பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணயின் போது இரண்டு தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கி உயிருக்கு போராடுவதாக ஊட்டி தீயணைப்பு நிலையத்திற்கு இன்று நண்பகல் வாக்கில் அவசர அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த மீட்பு வீரர்கள், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மண்சரிவு
மண்சரிவு

சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளர்கள் மீது சரிந்த மண் குவியலை அதி வேகத்தில் அகற்றினர். இருப்பினும், மண்சரிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது.

இருவரது உடலையும் கூறாய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயரம் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ``சென்னையைச் சேர்ந்த குமரேசனுக்கு சொந்தமான இடம் ஊட்டி மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக 35 அடி நீளம், 15 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான மண் தோண்டும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவு
மண்சரிவு

இன்று பகல் 11.30 மணியளவில் 15 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டு கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை மூடியது. இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சேட் மற்றும் வேலு‌ ஆகிய இரண்டு தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆய்வு செய்துள்ளார். அலட்சியமாக செயல்பட்ட உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். வருவாய்த்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.