Published:Updated:

நெஞ்சில் பாய்ந்த சுழிக்கி; போராடி மீட்ட மருத்துவர்கள்! -எலியை விரட்ட சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்

கணினியில்
கணினியில்

எலியை குத்தும் சுழிக்கி ஆயுதம் மீன் தூண்டில் போல இருக்கும். குத்தியவுடன் திருப்பி எடுப்பது சிரமம். எதிர்பக்கமும் முள் இருக்கும். முன்னாள் தள்ளினாலும் குத்தும் பின்னால் இழுத்தாலும் குத்தும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். வயது 20. இந்த இளைஞர் தவறி கீழே விழுந்த போது ’சுழிக்கி’ என்று சொல்லக்கூடிய எலி குத்தும் ஆயுதம் நெஞ்சில் பாய்ந்தது.

வெளியே எடுக்கப்பட்ட சுழிக்கி
வெளியே எடுக்கப்பட்ட சுழிக்கி

இது குறித்து விஜயின் தாயார் நம்மிடம்..., ``காரைக்குடி ஊரிவயல் அடுத்த உஞ்சனை கிராமம் எங்களுக்குச் சொந்த ஊர். எங்கள் வீட்டை சுற்றி அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளது. இதனால் எங்கள் வீட்டை சுற்றி எலி தொல்லை இருக்கும். எலிகள் வீடுகளைச் சுற்றி தோண்டி எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன.

இதனால் அவ்வப்போது எலிகளை விரட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு 5க்கும் மேற்பட்ட எலிகள் வீட்டை சுற்றி அதிக சத்தத்துடன் தோண்ட ஆரம்பித்தன. இதனால் எனது மகன் விஜய் எலிகளை விரட்ட இருட்டில் சென்றான்.

கணினியில்
கணினியில்

அப்போது தவறுதலாக கீழே விழுந்த போது சுழிக்கி வலது மார்பில் பாய்ந்துவிட்டது. இதனால் இரவு 12 மணிக்கு காரைக்குடி மருத்துவமனையில் சேர்த்தோம். நீண்ட நேர ஆப்ரேசன் முடிந்த பின்னர் எனது மகன் மீட்கப்பட்டான். உயிர் போகும் வலியில் இருந்து என் மகனை டாக்டர்கள் காப்பாற்றினர்.

எலியை குத்தும் சுழிக்கி ஆயுதம் மீன் தூண்டில் போல இருக்கும். குத்தியவுடன் திருப்பி எடுப்பது சிரமம். எதிர்பக்கமும் முள் இருக்கும். முன்னாள் தள்ளினாலும் குத்தும் பின்னால் இழுத்தாலும் குத்தும். இதனால் இதை எடுப்பது மிகவும் சிரமம். குத்தியவுடன் சொல்ல முடியாத அளவிற்கு வலி ஏற்படும். இந்த சூழலில் என்னுடைய மகனின் நெஞ்சில் பாய்ந்தது என்னால் தாங்க முடியவில்லை.

நெஞ்சில் பாய்ந்திருந்த காட்சி
நெஞ்சில் பாய்ந்திருந்த காட்சி

எக்ஸ்ரே உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த சுழிக்கியை வெளியே எடுத்தார்கள். தற்போது என் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் நலமாக உள்ளான்“ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு