Published:Updated:

மயிலாடுதுறை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்; மக்கள் அஞ்சலி!

மூளைச்சாவு அடைந்த இளைஞர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவர் உடல் இன்று மயிலாடுதுறைக்கு எடுத்துவரப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்; மக்கள் அஞ்சலி!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவர் உடல் இன்று மயிலாடுதுறைக்கு எடுத்துவரப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Published:Updated:
மூளைச்சாவு அடைந்த இளைஞர்

மயிலாடுதுறை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவர் உடல் இன்று மயிலாடுதுறைக்கு எடுத்துவரப்பட்டது. ஏராளமான பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தினர்

உடல் உறுப்புகள் தானம்
உடல் உறுப்புகள் தானம்

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வடக்கு தெருவைச்  சேர்ந்தவர் ஐயப்பன். பெட்டிக்கடை நடத்திவந்த இவர், மயிலாடுதுறையில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட சிறு விபத்தில் கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டதால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று காலை அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் ஐயப்பனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதனால் ஐயப்பனின் உடலிலிருந்து கண்கள், இதயம், இதய வால்வுகள், நுரையீரல், கிட்னி, கணையம் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டு சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், ஐயப்பனின் உடல் அவரின் சொந்த கிராமமான நல்லத்துக்குடிக்கு இன்று (10.10.2022) காலை எடுத்துவரப்பட்டது.

எம்.எல்.ஏ. ராஜகுமார்
எம்.எல்.ஏ. ராஜகுமார்

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார் உட்பட  ஏராளமானோர் ஐயப்பனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.