Published:Updated:

விழுப்புரம்: சாலையோர ஓடையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து! - பள்ளி மாணவர்கள் உட்பட 11 பேர் காயம்

விபத்துக்குள்ளான  பேருந்து
News
விபத்துக்குள்ளான பேருந்து

விழுப்புரத்தில் பயணிகளுடனும், பள்ளி மாணவர்களுடனும் சென்ற அரசு நகர்ப்புற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள சித்தாத்தூர் பகுதியிலிருந்து அரசு நகர்ப்புற பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி நேற்று மாலை புறப்பட்டுள்ளது. ஆலம்பாடி, முகையூர் பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுடனும், பொதுமக்களுடனும் பயணித்த அந்த அரசுப் பேருந்து ஆயந்தூர் எனும் இடத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென பேருந்தின் எதிரே குறுக்கிட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன பேருந்து ஓட்டுநர், விபத்து ஏற்படாமல் இருக்க பிரேக் அடித்து சற்று இடப்புறமாகத் திருப்பியுள்ளார்.

முண்டியம்பாக்கம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முண்டியம்பாக்கம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த அரசுப் பேருந்து, சாலையின் ஓரத்தில் இருந்த ஓடையில் பக்கவாட்டில் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும், உடனடியாகச் சிகிச்சை பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஆறு பள்ளி மாணவ, மாணவிகளும், ஐந்து பயணிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறும் காணை காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரித்துவருவதாகவும், வழக்கு பதியப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

இந்தநிலையில், மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியருடன் நேற்று (07.12.2021) மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் பொன்முடி, காயமடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார்.