Published:Updated:

`வீட்டிலேயே நாட்டு வெடி தயாரிப்பு; திடீர் விபத்து!' - பெரியகுளத்தில் தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்

பாண்டியம்மாளின் வீடு
பாண்டியம்மாளின் வீடு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நாட்டு வெடிகளை வீட்டில் தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில், தாய் பலியானார். மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் வரதப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர், பண்டிகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடியை வீட்டில் தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளார்.

`தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம்!' - மத்திய அரசு அனுமதி
 #NowAtVikatan
பாண்டியம்மாளின் வீடு
பாண்டியம்மாளின் வீடு

இன்று காலை பாண்டியம்மாள் வழக்கம்போல வெடி தயாரித்துக் கொண்டிருக்கும்போது, வெடி மருந்து திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால், வீட்டில் இருந்த அனைத்து வெடிகளும் வெடித்திருக்கின்றன.

பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்ததால், அக்கம் பக்கத்தினர் வந்து, பாண்டியம்மாள் வீட்டில் உள்ளவர்களை மீட்க முயன்றுள்ளனர். தீயும் புகையும் அதிகமாக இருந்ததால், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இதில், பாண்டியம்மாள் சம்ப இடத்திலேயே பலியானார்.

படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிவேதா
படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிவேதா

வீட்டின் உள்ளே இருந்த பாண்டியம்மாளின் மகள் நிவேதா படுகாயமடைந்தார். நிவேதாவை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில், வீட்டின் இரண்டு அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின.

`அன்று கம்பம்.. இன்று போடி!' - தேனி மக்களை உறையவைக்கும் தொடர் கொலைகள்

வரதப்பன் தெரு என்பது, பெரியகுளம் வடகரை காவல்நிலையம் அருகே இருக்கும் தெரு. நகரின் மிக முக்கிய பகுதியில், வீட்டில் வைத்து, வெடி மருந்துகளைப் பயன்படுத்தி நாட்டு வெடிகள் தயாரித்ததும், அதன் விளைவாக விபத்து ஏற்பட்டிருப்பதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு