Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: `5-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!' - உடல்களைத் தேடும் பணி தீவிரம்

உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்களைத் தேடும் பணி ஐந்தவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களால் நிறைந்துள்ள மூணாறில், ராஜமலை அடுத்துள்ள பெட்டிமுடி எனும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு கடந்த 6-ம் தேதி இரவு, நிலச்சரிவில் சிக்கியது. 25 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இதில், 82 பேர் சிக்கினர். அதிஷ்டவசமாக, 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் 1 நபர் உயிரிழந்தார். மண்ணில் புதைந்து 71 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மண்ணில் புதையுண்ட உடல்களை மீட்கும் பணி, கடந்த 7 -ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நேற்றைய நிலவரப்படி, 10 சிறுமிகள், 15 சிறுவர்கள் உட்பட 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 21 பேரின் உடல்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

சம்பவ இடத்துக்கு அருகே ஓடும் ஓடையில், சிலரது உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், ஓடையிலும் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. தொடரும் மழை காரணமாக, மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டாலும், சுமார் 500 பேர் கொண்ட மீட்புக் குழு தொடர்ந்து பணி செய்துவருகிறார்கள்.

உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.
உடல்களைத் தேடும் மீட்புக் குழுவினர்.

மீட்புக் குழுவில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரள போலீஸார், தீயணைப்புத்துறை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தன்னார்வ மீட்புக்குழு, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மூணாறு பஞ்சாயத்து குழுவினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சேவா பாரதி அமைப்பினர், தமிழ்நாட்டில் இருந்து சென்ற குழு, கேரள சிறப்பு நிவாரணப் பிரிவு குழுவினர், பெட்டிமுடி அருகே உள்ள தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள், எஸ்டேட் நிர்வாகத்தினர் எனச் சுமார், 250-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூணாறு நிலச்சரிவு: `குடும்பத்துல 14 பேரை இழந்துவிட்டேன்!’ - கண்ணீர்விடும் கயத்தாறு இளைஞர்
அடுத்த கட்டுரைக்கு