Published:Updated:

நாகை கோயில் திருவிழா: சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! - முதல்வர் இரங்கல்

திருவிழா - சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி

நாகை அருகே உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பர விழாவின்போது, அதன் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 

திருவிழா - தேர் சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி
திருவிழா - தேர் சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இரவு 11:50 மணிக்குப் புறப்பட்ட உத்திராபதீஸ்வரர் சுவாமி சப்பரம், தெற்கு வீதியில் திரும்பியது. இரவு 12:35 மணிக்கு சப்பரம் நிற்பதற்காக முட்டுக்கட்டை போடும் தீபராஜன் என்ற தொழிலாளி முட்டுக்கட்டையை அகற்றும்போது எதிர்பாராவிதமாகத் தடுமாறி விழவே, அவர் வயிற்றின் மீது சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த அவரை மீட்டு  திருமருகலிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தீபராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்து வழிபாட்டுத் தலங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என எஸ்.பி ஜவஹர் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உத்திராபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள், திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவிழா - தேர் சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி
திருவிழா - தேர் சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி

தீபராஜனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த தீபராஜனின் குடும்பத்தினர் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சப்பர விபத்தில் பலியான தீபராஜன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism