Published:Updated:

ராமநாதபுரம்: தொடர் மழையில் இடிந்து விழுந்த வீடு; வெளியேறிய 2 பேர்! - மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

மழையில் இடிந்த வீடு
மழையில் இடிந்த வீடு ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாரதிநகர், வெளிப்பட்டினம், சூரங்கோட்டை, கருங்குளம் ஆகியவற்றில் தொடர் மழை பெய்துவருகிறது. இன்று காலை கருங்குளம் கிராமத்தில் பெய்த மழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார். வீட்டிலிருந்த மேலும் இருவர் அந்நேரம் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

தொடர் மழை காரணமாக இடிந்த வீடு
தொடர் மழை காரணமாக இடிந்த வீடு
உ.பாண்டி

கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசிவருகிறது. இந்தக் காற்றால் பாம்பன் கடல் பகுதியில் பாலம் கட்டும் பணியில் பயன்படுத்தப்பட்டுவந்த கிரேன் மிதவை, தற்போதுள்ள பாம்பன் பாலத்தின் அடியில் சிக்கியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், இந்த மிதவையை உடனடியாக மீட்க முடியவில்லை. ஒரு வாரகால போராட்டத்துக்குப் பிறகு பாம்பன் பாலத்தின் அடியில் சிக்கிய மிதவை நேற்று காலை மீட்கப்பட்டது. இதனால் பாம்பன் ரயில் பாலத்தை மிரட்டிவந்த ஆபத்து நீங்கியது.

பாம்பன் ரயில் பாலத்தில் மீட்கப்பட்ட மிதவை.
பாம்பன் ரயில் பாலத்தில் மீட்கப்பட்ட மிதவை.
உ.பாண்டி

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 332 மி.மீ அளவு மழை கொட்டியது. இதில் தீர்த்தாண்டதானம் என்ற ஊரில் மட்டும் அதிக அளவாக 60 மி.மீ மழை பதிவானது. இனி வரும் நாள்களிலும் மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் மூலம் மழைக்கால பாதிப்புகள் குறித்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டிருக்கிரார். அவசர உதவிக்காக பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 18004257038 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை வந்தால் அரசும், மக்களும் செய்ய வேண்டியது இதுதான்! ரமணன் Exclusive Interview | SR Ramanan

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாரதிநகர், வெளிப்பட்டினம், சூரங்கோட்டை, கருங்குளம் ஆகியவற்றில் தொடர் மழை பெய்துவருகிறது. இன்று காலை கருங்குளம் கிராமத்தில் பெய்த மழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சோலையம்மாள் என்ற 70 வயது மூதாட்டி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மூதாட்டி சோலையம்மாள்
மூதாட்டி சோலையம்மாள்
உ.பாண்டி

மேலும் அந்த வீட்டில் வசித்துவரும் இருவர் வீடு இடியும் சத்தத்தைக் கேட்டு வெளியே ஓடிவந்ததால் அவர்கள் உயிர் பிழைத்தனர். இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் பி 1 போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டி சோலையம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு