Published:Updated:

`கடும் வெயில்.. அரைகுறையாக இடிக்கப்பட்ட சுவர்!- நிழலுக்கு ஒதுங்கிய தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்

உயிர் பலி ஏற்படுத்திய சுவர்.
உயிர் பலி ஏற்படுத்திய சுவர். ( உ.பாண்டி )

பணிகளுக்கு இடையே அரைகுறையாக இடிக்கப்பட்டிருந்த சுவரின் அருகில் கட்டடத் தொழிலாளிகள் இருவர் அமர்ந்திருந்துள்ளனர். அந்நேரத்தில் எதிர்பாரா நிலையில் திடீரென அந்தப் பழைய சுவர் இடிந்து விழுந்தது.

ராமநாதபுரத்தில் கட்டடம் கட்டும் பணியின் போது பழைய சுவரின் அருகே நிழலுக்காக ஒதுங்கி நின்ற தொழிலாளர்கள் இருவர் மீது சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களின்  உயிரைப் பறித்த சுவர்.
தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சுவர்.
உ.பாண்டி

ராமநாதபுரம் சிகில் ராஜவீதியில் உள்ள தெரு ஒன்றில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக இந்த இடத்தில் இருந்த பழைய வீட்டினை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் முனியசாமி என்பவர் தலைமையில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடம்.
விபத்து நடந்த இடம்.
உ.பாண்டி

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பணிகளுக்கு இடையே அரைகுறையாக இடிக்கப்பட்டிருந்த சுவரின் அருகில் கட்டடத் தொழிலாளிகள் இருவர் அமர்ந்திருந்துள்ளனர். அந்நேரத்தில் எதிர்பாரா நிலையில் திடீரென அந்தப் பழைய சுவர் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பால்சாமி (65), கொத்தர் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (60) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். சம்பவத்தைக் கண்ட மற்ற தொழிலாளர்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த தொழிலாளிகள் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

விபத்தில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளி
விபத்தில் உயிரிழந்த கட்டடத் தொழிலாளி
உ.பாண்டி

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பால்சாமி உயிர் பிரிந்தது. இதே போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியனும் உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு