Published:Updated:

பைக் மீது மோதிய காவலர் பேருந்து; வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்க்... பலியான இளைஞர்கள்- பகீர் வீடியோ

விபத்துக்குள்ளான காவல்துறை பேருந்து

காவலர்கள் பேருந்து, தியோரியா கிராமம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த மூன்று பேர்மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

பைக் மீது மோதிய காவலர் பேருந்து; வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்க்... பலியான இளைஞர்கள்- பகீர் வீடியோ

காவலர்கள் பேருந்து, தியோரியா கிராமம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த மூன்று பேர்மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

Published:Updated:
விபத்துக்குள்ளான காவல்துறை பேருந்து

பீகார் மாநிலத்தில் மறைந்த அரசியல் தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணின் 120-வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று விழா முடிந்து காவல்துறை அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்குத் திரும்பினர். அப்போது சப்ரா-சிவான் நெடுஞ்சாலையில் காவலர்களை ஏற்றிக்கொண்டு சென்ற காவலர்கள் பேருந்து, தியோரியா கிராமம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த மூன்று பேர்மீது மோதியிருக்கிறது.

இந்த விபத்தில் பைக் ஓட்டிய இளைஞர், காவலர்கள் பேருந்தில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், காவலர்கள் பேருந்தின் பெட்ரோல் டேங்க் வெடித்திருக்கிறது. இதில் வேனுக்கு அடியில் சிக்கியவர் மீது தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு பேருந்திலும் தீ பரவியது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மூவரும் இறந்துவிட்டனர். இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.