Published:Updated:

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! - கொடைக்கானலில் 4 மணிநேரம் போராடி குழந்தை மீட்பு

பழநி - கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 21 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி சூரத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியவர்கள் பெங்களூர், ஊட்டி, மதுரை போன்ற இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு இன்று காலை கொடைக்கானல் வந்தனர். அங்கு பல்வேறு பகுதிகளைப் பார்த்துவிட்டு, மாலை 4 மணிக்கு பழநிக்குப் புறப்பட்டனர். பழநி - கொடைக்கானல் சாலையில் வட்டமலை அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது வேன். சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

`திடீர் ஓசை; 20 அடி உயரத்துக்குத்  தீ ஜுவாலை!' - கோவிலூரைப் பதறவைத்த மின்வாரிய விபத்து
விபத்து
விபத்து

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் பழநி டி.எஸ்.பி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் அபிஷேக் காந்தி என்பவரின் மனைவி தேவிஷா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. பள்ளத்திலிருந்து அனைவரையும் கயிறு கட்டி மீட்டனர். 6 வயதுக் குழந்தை இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது. 4 மணி நேரம் போராடி அந்தக் குழந்தையை மீட்டனர். தற்போது அனைவரும் சிகிச்சைக்காகப் பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனம் பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.