Published:Updated:

மருத்துவக் கல்லூரி திறப்புவிழா: லோடு ஆட்டோவிலிருந்த பட்டாசு வெடித்து விபத்து - அதிர்ச்சி CCTV காட்சி

வெடித்துச் சிதறும் பட்டாசுகள்

மருத்துவக் கல்லூரி திறப்புவிழாவுக்காக நடந்த பேரணியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவக் கல்லூரி திறப்புவிழா: லோடு ஆட்டோவிலிருந்த பட்டாசு வெடித்து விபத்து - அதிர்ச்சி CCTV காட்சி

மருத்துவக் கல்லூரி திறப்புவிழாவுக்காக நடந்த பேரணியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
வெடித்துச் சிதறும் பட்டாசுகள்

தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி நகரில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசு சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி திறப்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறப்புவிழாவை முன்னிட்டு, கட்சி சார்பில் நடத்தப்பட்ட பைக் பேரணியின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசுகளை வெடிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட சந்தீப், குஷால், சுபாஷ் ஆகிய மூன்று பேர், பட்டாசுகளுடன் லோடு எற்றிச் செல்லும் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர்.

விபத்து
விபத்து

அப்போது ஆட்டோவில் இருந்த பட்டாசு மூட்டைகளுக்கு இடையே நின்றுகொண்டு, சந்தீப் பட்டாசு ஒன்றைக் கொளுத்தியிருக்கிறார். அது வெடித்ததும், ஆட்டோவில் இருந்த அனைத்துப் பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனால் வாகனத்தில் இருந்த சந்தீப்பின் உடல் முழுவதும் தீ பரவியது. அதனால், ஆட்டோவிலிருந்து சந்தீப் குதித்திருக்கிறார். உடனே டி.ஆர்.எஸ் தொண்டர்கள் தீயை அணைக்க முயன்றிருக்கிறார்கள். இந்தக் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியிருக்கின்றன. மேலும், வாகனத்தில் இருந்த இருவர் காயமடைந்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களை சங்கரெட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். 70 சதவிகிதத் தீக்காயம் அடைந்த சந்தீப் (28) ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மீதமுள்ள இருவருக்கு 10 சதவிகிதத்துக்கும் குறைவான தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விபத்தில் டிஆர்எஸ் மாவட்டத் தலைவரும், கைத்தறி நெசவுக் கழகத் தலைவருமான சிந்தா பிரபாகருக்குக் காலில் லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.