Published:Updated:

இன்ஜினில் கோளாறு; மும்பை அருகே நடுக்கடலில் அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்; 4 பேர் உயிரிழப்பு!

ஓஎன்சிஜி ஆயில் தளம் - நடுக்கடல்

மும்பை அருகே ஹெலிகாப்டர் அவசரமாக நடுக்கடலில் தரையிறங்கியது.

இன்ஜினில் கோளாறு; மும்பை அருகே நடுக்கடலில் அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்; 4 பேர் உயிரிழப்பு!

மும்பை அருகே ஹெலிகாப்டர் அவசரமாக நடுக்கடலில் தரையிறங்கியது.

Published:Updated:
ஓஎன்சிஜி ஆயில் தளம் - நடுக்கடல்

மும்பை அருகே ஹெலிகாப்டர் ஒன்று ஒன்பது பேருடன் நடுக்கடலில் ஓ.என்.ஜி.சி ஆயில் எடுக்கும் இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாகர் கிரண் ஓ.என்.ஜி.சி ஆயில் தளத்துக்கு அருகே கடலில் விழுந்தது. மிதவை பொருத்தப்பட்டிருந்ததால் ஹெலிகாப்டர் கடலில் விழுந்தும் நீரில் மூழ்காமல் தப்பியது.

தகவலறிந்து இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டன. அதோடு கடலோர பாதுகாப்புப்படை விமானம் ஹெலிகாப்டர் கடலில் விழுந்த இடத்துக்கு வந்து தேவையான உதவிகளைச் செய்தது. ஹெலிகாப்டர் ஆயில் எடுக்கும் இடத்தில் இறங்க முயன்றபோது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தரையிறங்க வேண்டிய இடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் மிதவையின் உதவியுடன் தரையிறங்கியிருக்கிற

ஒஎன்சிஜி ஆயில் தளம்
ஒஎன்சிஜி ஆயில் தளம்

மீட்புப் பணியில் மால்வியா-16 கப்பலும் ஈடுபட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் படகு மற்றும் கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தத் தகவலை கடலோர பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். மீட்புப் பணிகள் ஒரு மணி நேரம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 4 பேர் அதிகப்படியான தண்ணீரை குடித்திருந்ததால் மயக்க நிலையில் இருந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர்கள் நான்கு பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். மும்பை அருகே நடுக்கடலில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஆயில் தளம் இருக்கிறது. இதில் ஆயில் எடுக்கப்பட்டுவருகிறது. மும்பையில் தற்போது மழைக்காலம் என்பதால் கடலில் எப்போதும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் கடலில் கடுமையான சீற்றம் ஏற்பட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆயில் எடுக்கும் தளத்தில் அதிகாரிகள் தங்கியிருந்த படகுகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!