Published:Updated:

`3-வது மாடியில் இருந்து பெயர்ந்து விழுந்த ஜன்னல்!' - பட்டுக்கோட்டை மாணவிக்கு நேர்ந்த சோகம்

சிகிச்சையில் மாணவி
சிகிச்சையில் மாணவி

ஆசிகாவின் தலையில் ஜன்னல் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் பெயர்ந்து உடைந்து, கீழே இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தலையில் விழுந்ததில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையில் மாணவி
சிகிச்சையில் மாணவி

பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகே உள்ளது சிரமேல்குடி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் ஆசிகா என்ற மாணவி. நேற்று அரசுப் பள்ளியின் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த ஜன்னல் ஒன்று பெயர்ந்து விழுந்தது. அப்போது ஆசிகா கீழ்ப்பகுதியில் நின்றுகொண்டிருந்ததால் அவர் தலை மீது விழுந்தது.

இதில் அவருக்குத் தலையில் பலத்த அடிபட்டதால் அப்படியே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சகமாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆசிகாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தலைப்பகுதியில் அடிபட்டிருப்பதால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சிகிச்சையில் பள்ளி மாணவி
சிகிச்சையில் பள்ளி மாணவி

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். ``சிரமேல்குடி அருகே உள்ள மறவக்காடு கிராமத்தில் பெரியம்மா கலா என்பவரது வீட்டில் தங்கியிருந்தபடி, பள்ளிக்கு வந்து செல்கிறார் ஆசிகா. நேற்று திடீரென பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்த ஜன்னல் பெயர்ந்து கொண்டு கீழே விழுந்தது. இதில் அந்த ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியும் உடைந்தது.

வருகிற மார்ச் மாதம் ப்ளஸ் டூ வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் ஆசிகாவுக்கு தலையில் அடிபட்டுள்ளது அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது. இந்த நிலையில் அவர் தேர்வை எப்படி எழுதப்போகிறார் எனத் தெரியவில்லை. ஒருவேளை அதற்குள் ஆசிகாவுக்கு குணமாகவில்லை என்றால் அரசுதான் இதற்கு ஒரு வழியைக் கூற வேண்டும்.

``குடும்ப சூழல் குறித்து கவலைப்படாதீங்க!" - அரசுப்பள்ளி தத்தெடுப்பு விழாவில் துணை கமிஷனர் உருக்கம்

பள்ளிக் கட்டடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டதாலேயே ஜன்னல் பெயர்ந்து கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. மற்ற மாணவர்களின் எதிர்காலம் கருதி பள்ளிக் கட்டடம் சரியாக இருக்கிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்" என்கின்றனர் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு