Published:Updated:

`பார்வையைப் பறித்த டாட்டூ' - போலந்து பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

டாட்டூ
டாட்டூ

நவீன டாட்டூ மீதான மோகத்தால், போலந்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் பார்வையே பறிபோயிருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்பதற்காக இயற்கை மூலிகைகளை உபயோகித்து, மை தயாரித்து, உடலில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்களில் பச்சைக் குத்திக்கொண்டது எல்லாம் அந்தக் காலம்.

Poland Model Alexandria
Poland Model Alexandria

ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட சிந்தெடிக் மை கலவையை டாட்டூ என்ற பெயரில் வெவ்வேறு வண்ணங்களில் உடல் முழுவதும் வரைந்து, தங்களின் அடையாளத்தையே மாற்றிக்கொள்வதுதான் இந்தக் காலத்து ஃபேஷன். நவீன டாட்டூ மீதான மோகத்தால், போலந்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் பார்வையே பறிபோயிருக்கிறது.

போலந்தைச் சேர்ந்த 25 வயது மாடல் அலெக்ஸாண்ட்ரா சடோவ்ஸ்கா, அந்நாட்டுப் பிரபல ராப் பாடகர் போபெக்கின் மிகத் தீவிர ரசிகை. ஏராளமான `வெறித்தன' பாடல்களைப் பாடியுள்ள போபெக் டாட்டூ பிரியர். உடல் முழுவதும் விதம்விதமான டாட்டூக்களை குத்திக்கொண்ட இவர், டாட்டூ மீதுள்ள தீராக் காதலால், 2013-ம் ஆண்டு தன்னுடைய இரு கண்களிலும் டாட்டூ மையிட்டுக்கொண்டார்.

Rapper Popek
Rapper Popek

இந்நிலையில், போபெக்கின் ரசிகையான அலெக்ஸாண்ட்ரா, தன் கண்களினுள் உள்ள வெள்ளைப்பகுதியை டாட்டூ போட்டு மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, கண்களில் டாட்டூ போடுவதற்குப் பயன்படுத்தும் ரசாயன மையை ஊற்றி, கண்களின் வெள்ளைப் பகுதியை நிறம் மாற்றிய அப்பெண், கடந்த சில தினங்களாகத் தீரா வலியால் வேதனைப்பட்டு வந்துள்ளார்.

நாளடைவில் தன் வலது கண்ணில் பார்வையை இழந்திருக்கிறார். விரைவில் இடது கண் பார்வையும் இழக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், அலெக்ஸாண்ட்ராவுக்கு மீண்டும் இனி பார்வை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

Tattoos
Tattoos

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், டாட்டூ போடும்போது முக்கியமான செயல்முறையில் தவறு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

உடலில் உபயோகப்படுத்தும் டாட்டூ மையைக் கண்களுக்குப் பயன்படுத்தியதுதான் இந்த மோசமான பின்விளைவுகளுக்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, டாட்டூ போட்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்திருக்கிறது போலந்து அரசு.

Alexandria
Alexandria
``என் பையன் என்கூடவே இருக்கணும்னுதான் டாட்டூ போட்டுக்கிட்டேன்!" - நடிகை கனிகா

``பச்சைகுத்திய கலைஞருக்குக் கண்களில் டாட்டூ போடும் நுட்பமான செயல்முறை தெரியாது. ஆனாலும், இதுபோன்ற சென்சிடிவ் செயல்களில் ஈடுபட்டு, அப்பெண்ணின் பார்வையையே பறித்திருக்கிறது. எனவே, அனைவரும் மிகக் கவனத்துடன் இருங்கள்" என்று அப்பெண்ணின் வழக்கறிஞர் அந்நாட்டு ஊடகங்களுக்குக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு