Published:Updated:

`கட்டுப்பாட்டை இழந்தது.. பஸ் ஸ்டாப்பில் புகுந்த போலீஸ் வாகனம்'- தாய் மகளுக்கு நேர்ந்த சோகம்!

விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனம்
விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனம்

போலீஸாரை அழைத்துச் சென்ற வாகனம், பேருந்துக்குக் காத்திருந்த கூட்டத்தில் நுழைந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நெல்லை மாவட்டம் முழுவதும் 3500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயுதப்படைப் போலீஸாரும் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் பொதுமக்கள்
விபத்தில் காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் பொதுமக்கள்

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக காவல்துறை வாகனத்தில் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸாரை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சொக்கம்பட்டி பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த கூட்டத்துக்குள் நுழைந்தது.

Vikatan

சொக்கம்பட்டி பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தார்கள். இருப்பினும் போலீஸ் வாகனம் மோதியதில் ஆயிஷா மல்லிகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆயிஷா மல்லிகாவுடன் பேருந்துக்குக் காத்திருந்த அவரது இரண்டாவது மகள், இர்பான் ஆசியா என்பவர் படுகாயமடைந்தார்.

விபத்து
விபத்து

இந்த விபத்தில், கண்சாள் மஹரிபா பீவி என்பவர் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர, காவல்துறை வாகனத்திலிருந்த மூன்று போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. காவல்துறை வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு