Published:Updated:

பைக் விபத்தில் சிக்கிய 8 மாத கர்ப்பிணி காவலர் பலி! - குமரியில் சோகம்... போலீஸ் விசாரணை

விபத்தில் இறந்த போலீஸ் உஷா

விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி காவலர் பலியான சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் விபத்தில் சிக்கிய 8 மாத கர்ப்பிணி காவலர் பலி! - குமரியில் சோகம்... போலீஸ் விசாரணை

விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி காவலர் பலியான சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விபத்தில் இறந்த போலீஸ் உஷா

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவர் மனைவி உஷா (38). உஷா கடந்த இரண்டு ஆண்டுகளாக வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் காவல் நிலையத்துக்கு பணிக்குச் சென்ற உஷா, வேலை முடிந்து இரவு 7 மணியளவில் ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். அவர் கட்டைக்காடு பகுதியில் ரோட்டை கடந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டரை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் உஷாவின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் உஷா தூக்கி வீசப்பட்டார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷா விற்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

விபத்தில் இறந்த கற்பிணி போலீஸ் உஷா
விபத்தில் இறந்த கற்பிணி போலீஸ் உஷா

படுகாயமடைந்த உஷாவை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உஷா பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த 8 மாத கருவும் உயிரிழந்தது. இதையடுத்து உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி போலீஸும், சிசுவும் பலியான சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் நிலை காவலர் உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை மையமாகக்கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.