Published:Updated:

விபத்தில் 4 பேர் பலி; துக்க வீட்டில் கதறியழுத நிறைமாத கர்ப்பிணி மயக்கமடைந்து உயிரிழந்த சோகம்!

விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோ
News
விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோ

ஏற்கெனவே கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், அந்த துக்க வீட்டுக்கு வந்த உறவினரான கர்ப்பிணிப் பெண் கீர்த்திகாவும் சோகம் தாங்காமல் அதிர்ச்சியடைந்து உயிரிழந்துள்ளார். இது செல்லம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அண்ணா நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். முருகேசன் குடும்பத்தாருக்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே செல்லம்பட்டி கிராமத்தில் குலதெய்வக் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக, கடந்த சனிக்கிழமையன்று கும்பகோணத்தில் இருந்து லோடு ஆட்டோ ஒன்றில் முருகேசன் குடும்பத்தினர் மற்றும் அவரின் உறவினர்கள் 11 பேர் திருச்சியை நோக்கி வந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி
விபத்தை ஏற்படுத்திய லாரி

கல்லணை - திருச்சி வரும் வழியில் பனையபுரம் அருகே முருகேசன் குடும்பத்தார் பயணித்த வண்டி வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று பயங்கரமாக அவர்களது ஆட்டோ மீது மோதியது. இதில் வண்டியிலிருந்த 11 பேரும் பலத்த காயமடைந்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே முருகேசனின் மருமகள் சூர்யா மற்றும் அவரின் தங்கை லெட்சுமி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமிருந்த 9 பேரும் திருச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி முருகேசனின் மகன் சத்தியானந்தமும், வண்டியில் பயணித்த 9 வயதுச் சிறுமி அக்சிதாவும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது. இந்த விபத்து குறித்து திருச்சி கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த சூர்யா
உயிரிழந்த சூர்யா

இந்நிலையில், உயிரிழந்த முருகேசனின் மருமகள் சூர்யாவின் இறுதிச் சடங்கு விராலிமலை அருகேயுள்ள செல்லம்பட்டியில் 8-ம் தேதி நடந்தது. இந்த துக்க நிகழ்ச்சிக்கு உயிரிழந்த சூர்யாவின் தம்பி ரஞ்சித்தும், அவரின் மனைவி கீர்த்திகாவும் வந்துள்ளனர். 8 மாத நிறைமாத கர்ப்பிணியான கீர்த்திகா, நாத்தனார் சூர்யாவின் இழப்பையும், நடந்த கோர விபத்தையும் நினைத்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் கீர்த்திகாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, வாந்தி எடுத்து மயங்கி கீழே சரிந்து விழுந்துள்ளார்.

பதறிப்போன குடும்பத்தார் உடனே கீர்த்திகாவை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கொடுத்துவிட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இருந்தபோதிலும் சிகிச்சைப் பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார்.