Published:Updated:

மைசூர்: கார் விபத்து; பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி உட்பட ஐந்து பேர் காயம்!

பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த பிரகலாத் மோடி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மைசூர்: கார் விபத்து; பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி உட்பட ஐந்து பேர் காயம்!

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த பிரகலாத் மோடி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Published:Updated:
பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி

கர்நாடக மாநிலம், மைசூர் நகரிலிருந்து, 14 கிலோ மீட்டர் தொலைவில், கட்கோலோ என்ற கிராமம் உள்ளது. இதன் வழியாக இன்று மதியம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரரான பிரகலாத் மோடி (69) தனது காரில் (Mercedes-Benz SUV) பயணித்தார். டிரைவர் சத்திரநாராயணன் காரை இயக்க, பிரகலாத் மோடி, அவர் மகன் மேகுல் மோடி, மருமகள் ஜினாள், பேரன் மஹரத் உள்ளிட்டோர் பயணித்தனர்.

பிரகலாத் மோடி.
பிரகலாத் மோடி.

அப்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டிலுள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அங்குள்ள மக்கள் காரில் இருந்த அனைவரையும் மீட்டு, மைசூர் ஜேஎஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த பிரகலாத் மோடி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.