Published:Updated:

மும்பை: உரசிக்கொண்ட ரயில்கள்... தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

தடம் புரண்ட ரயில் மீட்பு

மும்பையில் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

மும்பை: உரசிக்கொண்ட ரயில்கள்... தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

மும்பையில் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

Published:Updated:
தடம் புரண்ட ரயில் மீட்பு

மும்பை தாதரிலிருந்து வாரத்தில் இரண்டு நாள்கள் புதுச்சேரிக்கு தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாள்களும் இரவு 9:30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். நேற்று இரவு வழக்கம்போல் ரயில் தாதரிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது அடுத்த ரயில் நிலையமான மாட்டுங்கா அருகே சென்றபோது, ஒரு தண்டவாளத்திலிருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாறியபோது புதுச்ச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உள்ள மூன்று பெட்டிகள் வேறு ஒரு எக்ஸ்ப்பிரஸ் ரயிலுடன் உரசிக்கொண்டன. இதனால் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

 தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து
தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து

ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் கமிஷனர் காலித் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ``தாதரில் இரண்டு ரயில்கள் லேசாக உரசிக்கொண்டன. இதில் தடம்புரண்ட புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இரவில் நடந்த இச்சம்பவத்தால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். மத்திய ரயில்வேயில் இந்த மாதம் நடக்கும் இரண்டாவது ரயில் விபத்து இது. இதற்கு முன்பு நாசிக்கில் கடந்த 3-ம் தேதி பவன் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism